சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?

Latest News Snehan In Tamil Serial : பாடலாசிரியர் சினேகன், தற்போது ஒரு புதிய சீரியலில் கதாநாயகனாக களமிறங்குகிறார். அது என்ன சீரியல் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 31, 2024, 03:40 PM IST
  • சீரியலில் களமிறங்கும் சினேகன்
  • அவருக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்
  • யார் தெரியுமா?
சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?  title=

Latest News Snehan In Tamil Serial : சினிமாவில் நடிப்பவர்கள் சீரியலில் வந்து நடிப்பதும், சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர்கள் சினிமாவில் நாயகியாவதும் வாடிக்கையானதுதான். இவ்வளவு ஏன்? ஒரு சில இயக்குநர்களும் கூட சீரியல்களில் இயக்குநராக பணிபுரிந்து பின்பு சினிமாவிற்குள் நுழைகின்றனர். அந்த வகையில், புதிதாக ஒரு பாடலாசிரியரும் சின்னத்திரை கதாநாயகனாக களமிறங்குகிறார். 

சினேகன்:

தமிழ் திரையுலகின் மிக முக்கிய பாடலாசிரியர்களுள் ஒருவராக இருப்பவர், சினேகன். தஞ்சாவூரில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், 2000 ஆம் ஆண்டில் திரையுலகிற்குள் நுழைந்தார். இவருன் பிறந்தவர்கள் மட்டும் 7 பேராம், 8வதாக பிறந்த சினேகனுக்கு மட்டும் சினிமா ஆசை இருந்ததால், வைரமுத்துவிடம் 5 ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறார். இதுவரை, 2,500க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் இவர், 500க்கும் மேற்பட்ட படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார். அதே போல சில படங்களில் துணை கதாப்பாத்திரமாகவும் நடித்திருக்கிறார். 

தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தார், சினேகன். இதில் ரன்னர் அப் பட்டத்தை பெற்ற இவர், கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் அறிவிப்பை தொடர்ந்து, வெளியில் வந்ததும் முதல் வேளையாக அக்கட்சியில் தன்னை உறுப்பினராக்கி கொண்டார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நின்ற இவர் 5ஆம் இடம் பெற்றார்.

சீரியல் கதாநாயகனாக…

சினேகன், கன்னிகா ரவி என்ற துணை நடிகையை 2021ஆம் ஆண்டு கரம் பிடித்தார். சினேகனுக்கும் அவரது மனைவிக்கும் இருக்கும் வயது வித்தியாசம் குறித்து தற்போது வரை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது சினேகன் சீரியலில் நடிக்க இருக்கும் தகவலும் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமான பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் சினேகனும் அவரது மனைவியும் சிறப்பு விருந்தினராக நடித்திருக்கின்றனர். இதையடுத்து தற்போது சினேகன் சீரியல் நாயகனாக மாறியிருக்கிறார். 

மேலும் படிக்க | ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா?... கவிஞர் சினேகன் சொல்லும் பதில்

ஜோடி இவரா?

சினேகன் ஹீரோவாக நடிக்க இருக்கும் சீரியல், ஒரு பிரபல தாெலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிப்பதும் கூட ஒரு பிக்பாஸ் பிரபலம்தான். அவர் வேறு யாருமில்லை, பிபி 4ல் பலரது கவனம் ஈர்த்த அனிதா சம்பத்தான். செய்தி வாசிப்பாளரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தி வாசிப்பை விட்டுவிட்டார். தற்போது சீரியலுக்கு தாவியிருக்கும் இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். சினேகனும் இவரும் நடிக்கும் இந்த சீரியலுக்கு ‘பவித்ரா’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 

Anitha Sampath

தற்போது இவர்கள் இருவருடைய சீரியல் எண்ட்ரியும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் தகவலாக இருக்கிறது. சினேகன், தனது பாடல் வரிகளால் மக்களை ஈர்த்தது பாேல, சீரியல் நாயகனாகவும் பார்வையாளர்களை கவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக பலர் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | பாடலாசிரியர் சினேகன் மீது போலீசில் புகார் செய்த தமிழ் நடிகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News