)
Sardar 2 Shooting Accident Stuntman Dies : கார்த்தி நடிப்பில் வெளியான படம், சர்தார். இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பணிபுரிந்து வந்த சண்டை கலைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
சர்தார் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து:
கார்த்தி நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். இந்த படத்தில் இரு வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
சர்தார் 2 திரைப்படம், முதல் பாகம் போலவே ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. இதில், பல ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்று வருகிறது. இதையடுத்து, சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. ஒரு காட்சியை படமாக்கிய போது, ஏழுமலை என்ற சண்டை கலைஞர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறார். எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உயரத்தில் நின்றிருந்த இவர், கீழே விழுந்த வேகத்தில் நுரையீரல் மற்றும் உள் பாகங்களில் அடிப்பட்டிருக்கிறது. இதையடுத்து இவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அதிகாலை 1:30 மணியளவில் இவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கு காரணம், உட்புற இரத்தக்கசிவு என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.
போலீஸார் விசாரணை:
சர்தார் 2 படப்பிடிப்பில் ஏழுமலை என்ற சண்டை கலைஞர் உயிரிழந்திருப்பதை தொடர்ந்து இது குறித்து விருகம்பாக்க காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ