Weekly Horoscope Tamil : 12 ராசிகளுக்கும் அவர்களின் கிரகப்பலன்களுக்கு ஏற்ப அந்த நாளோ அல்லது வாரமோ அமையும். அப்படி, உங்களுடைய ராசிக்கு அடுத்த வாரம் எப்படி இருக்கப்போகிறது என்பதை இங்கு பார்ப்போம்.
மேஷம்:
இந்த வாரம், மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு சொத்து வாங்கும் ஆசை ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அதனை தைரியமாக எதிர்கொள்வீர்கள். வாரத்தின் இடையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது குணாதிசயம் பல நல்ல விஷயங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வரலாம்.
ரிஷபம்:
இந்த வாரம் நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து நிதானமாக செயல்பட வேண்டும். இந்த வாரத்தின் தொடக்கம் உங்கள் மெதுவாக சென்றாலும், மெல்ல மெல்ல நல்ல வழிகள் பிறக்கும். உங்களுக்கு பிடித்தவர்களுடன் இந்த வாரத்தில் பெரும்பான்மையான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் சிறு முயற்சியும் உங்களது பெரிய வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுக்கலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த வாரம் படைப்பாற்றல் நிறைந்த வாரமாக இருக்கும். உங்களுக்கு தோன்றும் புதுப்புது யோசனைகளால் புதிய கதவுகள் திறக்கும். ஏதாவது ஒரு பொதுக்கூட்டத்தில் நீங்கள் சந்திக்கும் நபர் உங்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்பை கொடுக்கலாம். இதுவரை உங்களுக்கு வராமல் இருந்த தொகைகள் வந்து சேரலாம்.
கடகம்:
அடுத்த வாரம், உங்களுக்கு வளர்ச்சி தரும் வாரமாக இருக்கும். பிறர் உங்களிடம் என்ன உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் மனம் என்ன சொல்கிறது என்பதை கேட்டு அதன்படி நடக்க வேண்டும். உங்கள் உடலையும் மனதையும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் முன்னால் கொடுத்திருந்த கடன் தொகை, இப்போது கைக்கு வந்து சேரலாம். பெரிய முதலீடுகளில் பணத்தை போடுவதற்கு முன்பு அந்த தொழிலில் யார் சிறந்த விளங்குகிறாரோ அவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் உணர்ச்சி ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களை சுற்றி இருப்பவர்களுடன் ஒட்டுதலுடன் இருக்க மறந்துவிடக்கூடாது. எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்னரும் இரண்டு முறை யோசிக்கவும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கோபமான தருணங்களில் நாவை அடக்கி பழகவும்.
கன்னி:
இந்த வாரம், உங்களுக்கு கிடைக்கும் வெற்றிகளை கொண்டாட மறக்க வேண்டாம். உங்கள் உடல் நலனிலும், மன நலனிலும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். நீங்கள் எந்த காரியத்தை மனதில் வைத்து ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்களோ, அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள், இந்த வாரம் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனை கொடுக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் பிறரை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசிக்கவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள், அடுத்த வாரம் மன தைரியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, பிற விஷயங்களை வெளியில் விட்டுவிட வேண்டும். சிங்கிளாக இருப்பவர்கள், ஒரு ஸ்பெஷலான ஆளை பார்க்கலாம்.
தனுசு:
இந்த வாரம் நீங்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் உள் மனம் கூறுவதை கேட்டு நடந்தால், நல்ல செய்தி உங்களை தேடி வரலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தால், உங்களுக்கு தேவையான விஷயங்கள் உங்கள் கைகளை வந்து சேரும். நீங்கள் எதிர்பாராத விதமாக மேற்கொள்ளும் பயணங்கள், உங்களுக்கு ஆதாயத்தை தேடி தரலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள், அடுத்த வாரம் அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். இத்தனை நாட்களாக உழைப்பில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவர்கள், கண்டிப்பாக ஓய்வு எடுப்பது அவசியம். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இருந்து வந்த தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீரலாம். நிலுவையில் இருந்த கடன் தொகைகளை திரும்ப செலுத்துவதற்கான வாய்ப்புகள் வரலாம்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சியும் கஜகேசரி யோகமும்... 2025ம் ஆண்டில் கோடி நன்மைகளை பெறும் 5 ராசிகள்
கும்பம்:
அடுத்த வாரம், கும்ப ராசிக்காரர்கள் வாயை அடக்க கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது செயல்களுக்கு, பிறர் பாராட்டுகளை தெரிவிக்கலாம். பயணங்கள் மேற்கொள்ளும் ஆசையினால் அதற்கான திட்டமிடுதல்களில் ஈடுபடுவீர்கள். புதிய வேலையை தேடுபவர்களுக்கு அடுத்த வாரம் நல்ல செய்தி வரலாம். மனதை அலைபாய விடாமல் தடுக்க, தியானம் செய்வது நல்லது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு அடுத்த வாரம், உணர்ச்சி ரீதியாக கடினமான வாரமாக இருக்கும். உங்களுக்கு வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பின்னர் வருந்துவீர்கள். எந்த வேலையையும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று பார்க்காமல், கையோடு கையாக அதனை முடித்து விட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன் 2025 : கஜலட்சுமி யோகம்... 6 ராசிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ