GOAT பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: 14 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

The GOAT Movie Box Office Collection Day 14: விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தின் வசூல் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 19, 2024, 10:43 AM IST
  • தி கோட் படத்தின் 14 நாட்கள் வசூல்
  • அதுக்குள்ள இத்தன கோடியா?
  • ஆனா லியோவை விட குறைவுதான்!
GOAT பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: 14 நாட்களில் இத்தனை கோடி வசூலா?  title=

The GOAT Movie Box Office Collection Day 14: வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில், விஜய் ஹீராேவாக நடிக்க அவருடன் சேர்ந்து தமிழ் திரையுலகின் பல முக்கிய நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். 

தி கோட் திரைப்படம்:

தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநராக கருதப்படும் வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து முதன்முதலாக தி கோட் படத்தை இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம், இம்மாதம் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. விஜய் பல வருடங்களுக்கு பிறகு தந்தை-மகன் என இரு கதாப்பாத்திரங்களில் இதில் நடித்திருந்தார். அது மட்டுமன்றி, நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரமாகவும் வந்து அனைவரையும் வியக்க வைத்தார். இதில் அவருக்கு ஜோடியாக சினேகா-மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

லைலா, பிரசாந்த், மைக் மோகன், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்த இந்த படத்தில் நடிகை த்ரிஷாவும், சிவகார்த்திகேயனும் காமியோ ரோல் செய்தனர். ஒரு பழிவாங்கும் கதையை, கமர்ஷியல் அம்சத்தில் கொடுத்து, ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படம், ஒரு சிலரிடத்தில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

வசூல் விவரம்..

பொதுவாக, விஜய்யின் படம் என்றாலே அந்த கதை சுமாராக இருந்தாலும் படம் நல்ல வசூலை பெற்று விடும். காரணம், விஜய் படத்தை பலர் குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பர். இதனால், வசூல் ஓரளவிற்கு கலெக்ட் ஆகி விடும். அந்த வகையில், தி கோட் படமும் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் ரூ.125 கோடிக்கும் மேலான தொகையை கலெக்ட் செய்ததாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது, படம் வெளியாகி 14 நாட்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் நேற்று ஒரு பதிவை வெளியிட்டது. அதில், வெளியாகி 13 நாட்களுக்குள்ளாகவே தி கோட் படம் உலகளவில் 413 கோடி கலெக்ட் செய்திருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?

லியோவை விட குறைவு:

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், லியாே. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படம் மீது, ரிலீஸிற்கு முன்னரே அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால், வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.145 கோடியை இப்படம்ட வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இறுதியில், படம் சுமார் ரூ.620 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனாக பெற்றதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும், லியோ படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களே எட்டுத்திக்கிலிருந்தும் வந்தன. 

தி கோட் படத்திற்கு நல்ல விமர்சனங்களே வந்திருந்தாலும் வெளி மாநிலங்கள் படம் தோல்வி அடைந்திருக்கிறது. காரணம், படத்தில் சிஎஸ்கே அணியின் ரெஃபரன்ஸ்கள் இருந்தன. கேரளாவில் எப்போதும் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் அங்குமே கோட் படம் சரியாக ஓடவில்லை. தமிழகத்திலும், வெளி நாடுகளிலும் படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | தி கோட் படத்தில் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News