விடுதலை படத்தின் மூன்றாம் பாகம் வருகிறதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

Viduthalai 3 Update: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 25, 2024, 11:16 AM IST
  • விடுதலை 2 படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இடம்பெற்று இருந்தார்.
  • விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
  • விடுதலை முன்றாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்.
விடுதலை படத்தின் மூன்றாம் பாகம் வருகிறதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட் title=

Viduthalai Part 3 Update: விடுதலை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இதனிடையே தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

விடுதலை திரைப்படம்:
தமிழ் சினிமாவின் நம்பக இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர், இயக்குனர் வெற்றிமாறன். ஜன்ரஞ்சகமான கதைகளை மக்களின் மனதில் அழுத்தமாக பதியும் அளவிற்கு இயக்கி தனக்கென தனி அடையாளத்தை அவர் தமிழ் சினிமாவில் பதித்துள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி காவல் அதிகாரியாக நடிக்க இவருக்கு எதிரான கதப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். மேலும் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் இரு மொழிகளிலுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

விடுதலை பாகம் 2: 
விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு கடம்பூரில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைப்பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று ஆரம்பித்தது. முதல் பாகத்தில் நாயகன் சூரியையும் கிராம மக்களையும் சுற்றி நிகழுவது போல படத்தின் கதையம்சம் இருந்தது. ஆனால், இந்த பாகத்தில் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்ட அம்சங்கள் காண்பிக்கப்பட உள்ளன. இதன் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. குறிப்பாக சிறுமலை எனும் இடத்தில் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகின்றன. விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் மீதம் இருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Why Actor Vijay Likes Vijayakanth So Much? நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?

இதனிடையே சமீபத்தில் விடுதலை 2 படத்தின் (Viduthalai Part 2) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில், “உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்” என்ற திருக்குறள் இடம்பெற்று இருந்தது, மேலும் இந்த போஸ்டரில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இடம்பெற்று இருந்தார்.

விடுதலை பாகம் 3:
இந்நிலையில் தற்போது விடுதலை முன்றாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை இரண்டாம் பாகத்திற்கான ரன் டைம் 4 மணிநேரமாக இருக்கிறது என்றும், இதனால் மூன்றாம் பாகம் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Vaazhai vs Kottukkali Box Office Collection : வாழை vs கொட்டுக்காளி! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? எந்த படம் ஹிட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News