மீண்டும் இணைந்த எதிர்நீச்சல் டீம்.. சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்

Ethirneechal Serial Latest Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் நட்சத்திரங்கள் இணைந்துள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 15, 2024, 08:42 AM IST
  • மீண்டும் தொடங்குமா எதிர்நீச்சல் சீரியல்.
  • நடிகர் நடிகைகள் மீண்டும் இணைந்துள்ள புகைப்படங்கள் வைரல்.
  • சீரியல் நடிகர் நடிகைகள் ரீல்ஸ் வீடியோக்கள்.
மீண்டும் இணைந்த எதிர்நீச்சல் டீம்.. சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர் title=

Ethirneechal Serial Latest Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் நட்சத்திரங்கள் இணைந்துள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது. தற்போது இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

எதிர்நீச்சல் சீரியல்:
தமிழ் தொலைக்காட்சி தொடர்களுள் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் (Ethirneechal Serial) சீரியல் ஆகும். இந்த தொடரின் இயக்குனர் திருசெல்வம் ஆவார். இவர் பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ள மிகவும் பிரபலமான சீரியல் இயக்குனர் ஆவார். இந்த சீரியல் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரின் கதாபாத்திரமும் ரசிகர்களை சிறிய காலக்கட்டத்திலேயே பெரிய அளவில் ஈர்த்துள்ளது. குறிப்பாக மறைந்த நடிகர் மாரிமுத்துக்கு தனி மவுசு இருந்தது என்று தான் கூற வேண்டும். அதுமட்டுமின்றி எதிர்நீச்சல் சீரியல் பற்றி சின்னத்திரை வட்டாரத்திலும் அதிகமாக பேசியுள்ளனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலையே டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருந்தது இந்த சீரியல். மேலும் இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல இல்லை என்றும் ரசிகர்கள் பாராட்டினர். 

எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகர்களின் முழு விவரம்:
இந்த சீரியலில் மறைந்த மாரிமுத்துவின் சாயலில் இருக்கும் வேல ராமமூர்த்தியை குணசேகரன் ஆக நடித்தார். மேலும் இந்த சீரியலில் இவர்களுடன் கனிகா, காயத்ரி கிருஷ்ணன், விமல் ராஜ், சத்யா தேவராஜ், ரித்திக் ராகவேந்திரா, விபுராமன், ஹரிப்ரியா, கமலேஷ், பிரியதர்ஷினி, சபரி, மதுமிதா, சத்யபிரியா ஆகியோரும் நடித்தனர்.

முடிவுக்கு வந்தது எதிர்நீச்சல் சீரியல்:
இதனிடையே வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் கடந்த ஜூன் 9 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. மக்கள் இந்த சீரியல் 2000 எபிசோடு தாண்டி வெற்றிகரமாக போகும் என்று நினைத்தனர், ஆனால் 750 எபிசோடு உடன் இந்த சீரியல் முடிவடைக்கு வந்தது. இதனால் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் அடுத்த சீசன் வருமா என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். 

மேலும் படிக்க | Premgi : பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் உள்ள வயது வித்தியாசம்! அம்மாடி..இவ்வளவா?

மீண்டும் இணைந்த சீரியல் நடிகர்கள்
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் முடிவு கடந்த வாரமே நடைபெற்ற போதிலும் அதைத் தொடர்ந்து சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோரும் அதே எதிர்நீச்சல் வீட்டில் ஒன்று சேர்ந்து சந்தித்திருக்கின்றனர். அப்போது அனைவருக்கும் எதிர்நீச்சல் இயக்குனர் நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த சீரியலில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரத்தின் பெயரை போட்ட புகைப்படத்தோடு அவர்களை இயக்குனர் அங்கீகரித்திருக்கிறார். இந்த புகைப்படங்களை இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக தங்களின் இனஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி சீரியல் நடிகர் நடிகைகள் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவார்களோ அதுபோல இப்போதும் இவர்கள் அனைவரும் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படம் மட்டும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 மேலும் படிக்க | ரோஜா கூட்டம் போல் அழகில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்.. இதோ போட்டோஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News