கடந்த ஜனவரி -8ம் தேதி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) லேசான கொரோனா அறிகுறிகளுடன், தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை (Covid 19) தொடர்ந்து அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்தனர்.
அப்போது அவரது (Lata Mangeshkar) உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ALSO READ | எச்சரிக்கை மணியாக இருக்கும் செயல்பாடுகள்! எளிதில் Corona பாசிட்டிவ் ஆகலாம்
தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. ஆனால், நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை (Covid 19) நிர்வாகம் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார்.
இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழும் லதா மங்கேஷ்கர், கடந்த 1942 ஆம் ஆண்டில் தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கியவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுமிருக்கிறார். இவருக்கு இந்தியாவின் 'மெலடி குயின்' என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாஹேப் பால்கே விருது மற்றும் பல கவுரவங்களை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.
ALSO READ | லதா மங்கேஷ்கர், மருத்துவர்கள் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR