லியோ டிரைலர் எப்படியிருக்கு? லோகேஷ் கனகராஜின் நண்பர் கூறிய விமர்சனம்!

Leo Trailer: லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதை தொடர்ந்து, அதை பார்த்த பிரபலம் ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Oct 4, 2023, 02:42 PM IST
  • லியோ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.
  • டிரைலர் எப்படியிருக்கிறது என்பது குறித்து பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.
  • அவர் கூறியுள்ள விஷயம் என்ன? இங்கே பார்ப்போம்.
லியோ டிரைலர் எப்படியிருக்கு? லோகேஷ் கனகராஜின் நண்பர் கூறிய விமர்சனம்! title=

விஜய் ஹீரோவாக நடித்துள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் அதைப்பார்த்த பிரபலம் ஒருவர் அது குறித்த விமர்சனத்தை கொடுத்துள்ளார். 

லியோ டிரைலர்:

லியோ படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலரும் இப்படம் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொரு முறையில் வெளியாகும் போது அதை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். அந்த நிலையில், நேற்று முன்தினம் லியோ டிரைலர் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

நாளை வெளியாக உள்ள டிரைலரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடனும் ஆர்வமுடனும் காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், லியோ பட டிரைலரை பார்த்த பிரபலம் ஒருவர் அது குறித்த விமர்சனத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் ரியல் சிங்கம்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபலம் கொடுத்த விமர்சனம்:

லோகேஷ் கனகராஜ்ஜின் எழுத்தாளர்கள் குழுவில் ஒருவர், தீரஜ் வைத்தி. லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் இவர். தீரஜ், லியோ படத்திலும் பணிபுரிந்துள்ளார். தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் இவர் சமீபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், லியோ பட டிரைலரை பார்த்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீரஜ் வைத்தி அந்த பதிவில், தற்போதுதான் லோகேஷ் கனகராஜை சந்தித்து டிரைலரை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், டிரைலரை பார்த்தது உங்கள் தாவாம்பட்டை எல்லாம் தரைலதான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் லியோ டிரைலர் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக எகிறியுள்ளது. 

எந்த படத்திற்கும் கிடைக்காத தனி கவனிப்பு..

லியாே படத்தை உலகம் முழுதிலும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இதுவரை எந்த தமிழ் படங்களுக்கும் கிடைக்காத தனி கவனிப்பு ஒன்று லியோ படத்திற்கு கிடைத்துள்ளது. 

வங்காள தேசத்தில் இதுவரை எந்த தமிழ் படமும் வெளியானதில்லை. இந்த நிலையல், விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் முதல் முறையாக அங்கு வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். 

ப்ரீ புக்கிங்கில் சாதனை:

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பட ரிலீஸின் 40 நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் தொடங்கி விட்டது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கில் மட்டும் இப்படம் 12 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அமெரிக்காவில் 4 கோடியும் யுகேவில் 4 கோடியும், கேரளாவில் 2 கோடியும் பிற இடங்களைல் 2 கோடியும் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாம் லியோ. 

‘தாஸ்’ சகோதரர்கள்:

லியோ படத்தில் பான் இந்திய நடிகரான சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவரது பெயர் இதில் ஆண்டனி தாஸ். இவரது பிறந்த நாளையொட்டி சில வாரங்களுக்கு முன்னர் இவர் கதாப்பாத்திரம் குறித்த க்ளிம்ஸ் வீடியாே வெளியானது. அடுத்து அர்ஜூனின் பிறந்தநாள் வந்தது. இதையொட்டி ‘க்ளிம்ஸ் ஆஃப் ஹரால்டு தாஸ்’ என்ற பெயரில் வேறு ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது. இதில் அவர் பேசிய ‘தேரிக்க..’ எனும் டைலாக் ரசிகர்களை ஈர்த்தது. 

விஜய்யின் பெயர், லியோ தாஸ். Leo-Badass பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த வரிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஆண்டனி தாஸ், ஹரால்டு தாஸ், லியோ தாஸ் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகளாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படக்குழு:

விஜய்யுடன் கடைசியாக ‘குருவி’ படத்தில் இணைந்து நடித்திருந்த த்ரிஷா, தற்போது 15 வருடங்கள் கழித்து அவருடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். படத்தின் இன்னொரு நாயகியாக வருகிறார், பிரியா அனந்த். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், தமிழ் இய்ககுநரும் நடிகருமான மிஷ்கின், காமெடி நடிகர் வையாபுரி, வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். இவர்களை தவிர, படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் யார் யார் என்பதை வெளியில் கூறாமல் வைத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்த லிஸ்டில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் தாஸ், பகத் பாசில், நரேன் என பல நட்சத்திரங்கள் உள்ளனர். யார் யார் நடித்திருக்கிறார்கள் என்பது படம் வெளிவந்த உடன்தான் தெரியும்.

மேலும் படிக்க | லியோ ட்ரைலர் வெளியாவது எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News