லியோ ட்ரைலர் வெளியாவது எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Oct 2, 2023, 05:35 PM IST
  • விஜய்யின் லியோ திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.
  • இதன் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்த பட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
லியோ ட்ரைலர் வெளியாவது எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. 

டீசர் ப்ரமோ வெளியீடு:

லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளிவரும் போதும் ரசிகர்கள் அதை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், லியோ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது. 

ட்ரைலர், வரும் 5ஆம் தேதி வெளியாகும் என 7ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை, படக்குழு ஜொமேட்டோ நிறுவனத்தின் நோட்டிஃபிகேஷன் பாணியில் வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். 

மிருகங்களுடன் சண்டை போடும் விஜய்:

லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்து அப்படத்தின் போஸ்டர்கள் பல வெளியாகி விட்டன. இரண்டு போஸ்டர்களில், விஜய் ஓநாய்களுடன் சண்டை போடுவது போன்ற போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. முன்னதாக வெளியான போஸ்டரில் விஜய் கையில் ரத்தம் சொட்ட சொட்ட கோடாரியை வைத்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் விஜய் கையில் பெரிய தடிமனான குச்சியை வைத்துள்ளார். அதனால், இந்த ஓநாய்களுக்கும் படத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 'லியோ' படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்யுமா? லோகேஷ் கனகராஜ் பதில்!

பாடல்களுக்கு பலத்த வரவேற்பு..

விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, கடந்த ஜூன் மாதம் ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. ரசிகர்களின் பலத்த வரவேற்பினை பெற்ற இந்த பாடலுக்கு, தணிக்கை என்ற பெயரில் ஆப்பும் பின்னாளேயே தொற்றிக்கொண்டு வந்தது. லிரிக்கல் வீடியோவாக உருவாகியிருந்த இந்த பாடலில் விஜய் சிக்ரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விழிப்புணர்வு வாசகம் இதில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் Leo-Badass பாடல் வெளியானது. இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 5 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்தது. தற்போது வரை, இப்பாடல் 16 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. 

படக்குழு:

லியோ படத்தில், விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். படத்தின் இன்னொரு நாயகி, பிரியா ஆனந்த். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதில் சஞ்சய் தத்தின் பெயர் ஆண்டனி தாஸ், அர்ஜூனின் பெயர், ஹரால்டு தாஸ். இவர்களின் கதாப்பாத்திரம் குறித்த க்ளிம்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. விஜய்யின் பெயர் படத்தில் லியோ தாஸ். இவர்கள் மூவரும் இதில் அண்ணன் தம்பிகளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர, இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள இளம் நடிகர் மாத்யூ தாமஸும் படத்தில் நடித்திருக்கிறார். இவர்களை தவிர அனுராக் காஷ்யப், கல்யாணி பிரியதர்ஷன், வையாபுரி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலகள் எதுவும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | லியோ படம் LCUவில் வருமா? வராதா? வெளியான முக்கிய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News