அஜித்துக்கு கதை ரெடி செய்த லோகேஷ்?... உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித்துடன் இணைந்தால் எந்த மாதிரி படம் இயக்குவேன் என லோகேஷ் அளித்திருக்கும் பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 19, 2022, 03:48 PM IST
  • அஜித் படம் குறித்து லோகேஷ் பதில் வைரல்
  • மாணவரின் கேள்விக்கு பதிலளித்தார் லோகேஷ்
  • இருவரும் இணைய வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை
 அஜித்துக்கு கதை ரெடி செய்த லோகேஷ்?... உற்சாகத்தில் ரசிகர்கள் title=

மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரது கவனத்தை ஈர்த்தவர் அடுத்ததாக கைதி படம் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படமும் வரவேற்பைப் பெற்றது. முதல் மூன்று படங்களிலேயே முன்னணி இயக்குநராக மாறிய லோகேஷின் கரியரை கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் படம் புரட்டிப்போட்டது. கமலின் தீவிர ரசிகரான அவர் விக்ரம் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். ஒரு ரசிகன் தனக்கு பிடித்தவரை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்க வேண்டுமென்று விக்ரம் படம் மூலம் பாடம் எடுத்தார் என்றே கூறலாம். அந்த அளவுக்கு படத்தின் ஒவ்வொரு காட்சியும், கமலிடம் அவர் வாங்கிய ஒவ்வொரு நடிப்பும் அனைவரையும் மிரள வைத்தது.

குறிப்பாக வேற்று மொழி படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து தமிழ் மொழி படங்கள் சோடை போயிருந்த நேரத்தில் விக்ரம் மூலம் கோலிவுட்டுக்கு புத்துணர்ச்சி ஊட்டினார் லோகேஷ். இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மோஸ்ட் வாண்டட் இயக்குநராகியிருக்கிறார்.

Kamal, Lokesh

கார்த்தி,விஜய், கமலுடன் இணைந்த லோகேஷ் அஜித்துடன் எப்போது இணைவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஆனால் அதற்கான எந்த மூவ்மெண்ட்டும் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதேசமயம், அஜித்துடன் பணியாற்ற லோகேஷுக்கு விருப்பம் இருக்கவே செய்கிறது. அதை அவரே சில பேட்டிகளில் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் அஜித்துடன் இணைந்தால் எப்படிப்பட்ட படம் செய்வீர்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “அஜித்துடன் இணைய எனக்கும் ஆசைதான். அப்படி அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் தீனா போன்ற ஒரு படத்தை இயக்குவேன்” என்றார். அவரது இந்த பதில் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கிறது.

H Vinoth, Lokesh

ஏனெனில் அஜித்தின் கரியரில் தீனா படத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. 2001ஆம் ஆண்டு வெளியான தீனா படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். முக்கியமாக அந்தப் படம் அஜித்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. எனவே லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் இணைந்து தீனா ஜானரில் ஒரு படம் செய்து அதகளம் செய்ய வேண்டுமென ஏகே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். 

அதுமட்டுமின்றி ஹெச்.வினோத்துடன் அஜித் தொடர்ந்து பணியாற்றிவரும் சூழலில் வினோத்தின் நெருங்கிய நண்பரான லோகேஷுடனும் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | நித்யா மேனனின் கர்ப்பம் உறுதியா?... புகைப்படத்தால் ஆடிப்போன ரசிகர்கள்

அடுத்ததாக விஜய்யை வைத்து படம் இயக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜ் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் படம் இயக்குவதால் இப்போதே அப்படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News