ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாரி, ஹாசினி, ஸ்ரீஜா என மூவருக்கும் கோவிலில் சீமந்த பங்க்ஷன் தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பாட்டி வளையலை உடையாமல் போட்டு விட வேண்டும் என்று சொல்ல முதலில் சூர்யா மாரிக்கு போட்டு விடுகிறான், அடுத்தாக அரவிந்த் ஹாசினிக்கு போட்டு விடும் போது கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும் சரியாக உடையாமல் போட்டு விடுகிறான்.
மேலும் படிக்க | 6 நாள் நடித்து கொடுக்க இத்தனை கோடி சம்பளமா! அசரவைத்த கமலின் சம்பள விவரம்..
அதனை தொடர்ந்து தினேஷ் வளையலை ஸ்ரீஜாவுக்கு போட்டு விடும் போது வளையல் உடைந்து விட எல்லாரும் பதற்றம் அடைகின்றனர், குழந்தைக்கு ஆபத்து என அதிர்ச்சி அடைய தினேஷ் வளையல் தானே, அதனால் ஒரு பிரச்னையும் இல்லை என்று சமாளித்து விடுகிறான். பிறகு உறவினர்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து வளையல் போட்டு விட்டு சடங்குகளை செய்ய மறுபக்கம் சூர்யாவின் நண்பன் போட்டோ குறித்து சொல்ல போன் செய்ய சூர்யா பங்க்ஷன் பிசியில் போனை எடுக்காமல் இருந்து விடுகிறான். அடுத்து மாரி தேவி அம்மா இங்கே வந்து நலங்கு வைத்து விட்டால் நல்லா இருக்கும் என்று நினைத்து வேண்டுகிறாள்.
அவள் வேண்டுதலை தொடர்ந்து அங்கு தோன்றும் தேவியம்மா மாரிக்கு நலங்கு வைத்து சாப்பாடு ஊட்டி விடுகிறார். இதனால் மாரி சந்தோஷமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | கோலாகலமாக தொடங்கும் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் reloaded 2
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ