தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் பசியில் இருக்கும் ஜாஸ்மினுக்கு முருகன் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது முருகனின் இந்த செயல்பாட்டை பார்த்த ஜாஸ்மின் இவன் நல்லவனா உண்மையாகவே எவனுக்கு தன் மீது காதல் இருக்கிறதா என்று குழப்பம் கொள்கிறாள்.
மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அதனைத் தொடர்ந்து மாரியை கொல்ல பிளான் போட்டு தேவி காலனியில் தங்கி இருக்கும் ஒரு பெண்ணை அழைத்து பணம் கொடுத்து மாரிக்கு விஷத்தை கலந்து கொடுக்க திட்டம் போடுகிறாள். பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பெண்ணும் இந்த டீலுக்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.
மாரியே சொல்லிட்டாங்க...!!!
மாரி | திங்கள் - வெள்ளி | இரவு 8.00 மணிக்கு.உங்கள் மனம் விரும்பும் மாற்றம் இனிதே இப்போது ஆரம்பம்...#Maari #Ashikapadukone #Adarsh #ZeeOnTheGo #ZeeTamil pic.twitter.com/K2i71hYqHa
— Zee Tamil (@ZeeTamil) October 11, 2023
அதனைத் தொடர்ந்து தேவி காலனி வரும் அப்பெண் மாரிக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுக்கப்போகும் சமயத்தில் சூர்யா அதை பார்த்துவிட கையும் களவுமாக சிக்கும் அந்த பெண்ணிடம் இது குறித்து விசாரிக்க ஜாஸ்மின் தான் காரணம் என தெரிய வருகிறது. இதனால் உச்சகட்ட கோபம் கொள்ளும் சூர்யா நேராக தாரா வீட்டிற்கு வந்து ஜாஸ்மினை பிடித்து சத்தம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இதுதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ