கனெக்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட்

நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 23, 2022, 05:03 PM IST
  • கனெக்ட் படம் நேற்று வெளியானது.
  • அஸ்வின் சரவணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார்.
  • விக்னேஷ் சிவன் தயாரித்து உள்ளார்.
கனெக்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் title=

இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது முந்தைய படங்களில் தான் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார், அந்த வகையில் அவர் நயன்தாராவை வைத்து கனெக்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இடைவெளி இல்லாமல் 99 நிமிடம் படம் என்ற ஒரு புதிய முயற்சியில் பட குழு இறங்கி இருந்தது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் கண்டிப்பாக இடைவெளி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் படக்குழு இடைவேளை விட சம்மதித்தது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, சத்யராஜ், வினை, அனுபம் கெர் போன்றவர்கள் நடித்துள்ளனர். 

நயன்தாரா தனது அப்பா சத்யராஜ் கணவர் வினை மற்றும் தனது மகள் ஹனியாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தினால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர், மருத்துவரான வினை கொரோனாவால் இறந்து விடுகிறார். இதனால் மிகுந்த சோகத்திற்கு ஆளான நயன்தாரா மற்றும் மகள் ஹனியாவிற்கும் கொரோனா தாக்கம் ஏற்படுகிறது. தந்தை இழந்த சோகத்தில் இருந்த மீளாத ஹனியா மந்திரத்தின் மூலம் தனது தந்தையிடம் பேச முயற்சிக்கிறார், அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கெட்ட ஆவி அவர் உடம்புக்குள் புகுந்து விடுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை கனெக்ட் படத்தின் கதை. காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஒரு பயம் படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுகிறது, இதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தற்போது நேற்று வெளியான இப்படம் திரையரங்கில் சக்கப் போடு போட்டு வருகிறது.

மேலும் படிக்க | அஜித்தை பின்பற்றும் விஜய்...? வருகிறது வாரிசு படத்தின் 3ஆவது பாடல்!

தற்கிடையில் தற்போது இந்தப் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2634 இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க, 29 இணையதள் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, "நேற்று திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரைத்துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதி, கனெக்ட் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று வழக்கமான ஒரு ஃபார்முலா உள்ளது, கனெக்ட் படமும் கிட்டத்தட்ட அதே பார்முலாவில் இருந்தாலும் இது சற்று தள்ளி நிற்கிறது. காரணம் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம்.

மேலும் படிக்க | தமிழக அரசு அதை செய்ய ஒருநாள் போதும் - விஷால் ஓபன்டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News