Amy Jackson: எமி ஜாக்சனுக்கு திருமணம்! மாப்பிள்ளை ‘இந்த’ ஹீரோதான்!

Amy Jackson Marriage: நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் அறிவித்துள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Jan 29, 2024, 08:03 PM IST
  • வெளிநாட்டு தமிழ் ஹீரோயின் எமி ஜாக்சன்.
  • மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகம்.
  • திருமணம் எப்போது?
Amy Jackson: எமி ஜாக்சனுக்கு திருமணம்! மாப்பிள்ளை ‘இந்த’ ஹீரோதான்! title=

Amy Jackson Marriage Annoucement:  ‘மதராசப்பட்டினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த எமி ஜாக்சன், தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்க உள்ளார்.

மதராசப்பட்டினம் நாயகி எமி ஜாக்சன்:

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம், ‘மதராசப்பட்டினம்’. இதில், ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்ததார். அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், எமி ஜாக்சன். முதன் முதலாக வெளிநாட்டை சேர்ந்த நாயகியை தமிழ் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர். இந்த படத்திற்கு பிறகு இவரை எங்கு சென்றாலும் ‘வாம்மா துரையம்மா’ என்று அழைக்க தொடங்கினர். இந்த படத்திற்கு பிறகு இவர் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீ-மேக்கில் ஹீரோயினாக நடித்தார். பின்பு ஒரு சில இந்தி படங்களில் நடித்தார். 

பிரபல ஹாலிவுட் நடிகருடன் காதல்..

நடிகை எமி ஜாக்ஸனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர், ஆண்ட்ரேஸ். தனது முன்னாள் காதலரான ஜார்ஜுடன் இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் இவர்களின் காதல் முறிவில் முடிந்தது. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை இவர், டேட்டிங் செய்து வந்தார். இவர்களின் காதலை அவ்வப்போது இவர்கள் சமூக வலைதளங்களின் மூலம் அறிவித்தனர். 

விரைவில் திருமணம்:

எமி ஜாக்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பணி சூழ்ந்த இடத்தில், தொங்கும் பாலத்தில் தனது காதலர் தனக்கு ப்ரப்போஸ் செய்ய, அதற்கு ஆச்சரியப்பட்டு தலையசைத்திருக்கிறார் எமி. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது. 

மேலும் படிக்க | விஜய் போலவே அரசியலில் ஈடுபாடுள்ள தமிழ் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?

இவர்தாங்க மாப்பிள்ளை..

எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் எட் வெஸ்ட் விக், உலகம் முழுவதும் பிரபலமான காசிப் கேர்ள் என்ற தொடரில் சக் பேஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமன்றி, ரோமியோ ஜூலியட், பின்னியனர் ரான்ஸம் உள்ளிட்ட பல ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். இவர், லண்டனில் உள்ள தியேட்டர் டிராமா கலைஞர்களின் குழுவில் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவராக உள்ளார். இவர், எமி ஜாக்ஸனை திருமணம் செய்து கொள்ள உள்ள செய்தி கேட்டு திரையுலகினர் உள்ளிட்ட பலர் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

எமி கடைசியாக நடித்த படம்..

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன் அடுத்து எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர் அருண் விஜய்யுடன் நடித்திருந்த மிஷன் சேப்டர் 1 படம் வெளியானது. இதில் காவல் அதிகாரியாக நடித்த எமி, தனது நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் திறமைக்காக ரசிகர்களிடம் பாராட்டு பெற்றார். எமி ஜாக்சன், படக்குழுவுடன் இணைந்து இது குறித்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அவர்களுடன் ஈஷா யோகா மையத்திற்கும் சென்று வந்தார். அடுத்து, இன்னும் சில தமிழ் படங்களிலும் இவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | எமி ஜாக்சன்-ஸ்ரேயா கலந்து கொண்ட தென்னிந்திய அழகிப்போட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News