அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்!!

வேதாளத்தின் டோலிவுட் ரீமேக்கில் பவன் கல்யாணின் மூத்த சகோதரர் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Aug 8, 2020, 05:35 PM IST
அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்!!
Photo: Twitter/@ThalaFansClub

வேதாளம் தெலுங்கு ரீமேக்: 2015 ஆம் ஆண்டில், தல அஜித் (Thala Ajith) நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் திரைப்படம், அந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. அதுவும் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் படமாகவும் அமைந்தது. 

இயக்குனர் சிவா (Director Siva) மற்றும் தல அஜித் ஒன்றாக இணைந்த இரண்டாவது படமாகும். அந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி மற்றும் கபீர் டுஹான் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். 

ALSO READ |  விருமாண்டி 2-வில் அஜித் நடிக்கிறாரா? வைரலாகும் போஸ்டர்!!

இந்த படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் (Telugu Remake) பலான் கல்யாண் நடிப்பார் என்றும் ஜில்லா புகழ் நீசன் இயக்குவார் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், சமீபத்திய செய்தி என்னவென்றால், வேதாளத்தின் டோலிவுட் ரீமேக்கில் பவன் கல்யாணின் மூத்த சகோதரர் மெகாஸ்டார் சிரஞ்சீவி (Chiranjeevi) கதாநாயகனாகவும், இயக்குனர் மெஹர் ரமேஷ் அதை இயக்குகிறார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. வேதாளத்தின் இந்த தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிரஞ்சீவியின் பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமாக வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ALSO READ | தல அஜீத்தின் 'வலிமை' படம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்