'மேயாத மான்' டிரைய்லர் வெளியானது!

Last Updated : Oct 15, 2017, 09:24 AM IST
'மேயாத மான்' டிரைய்லர் வெளியானது! title=

கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்' முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். 

ரத்தின குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு விது ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்கள். இதன் டீஸர் மற்றும் பாடல்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது இதன் டிரைய்லர் வெளியாகி இருக்கிறது. 'மேயாத மான்' வரும் தீபாவளி முதல் திரைக்கு வருகிறது. 

Trending News