மோகன்லாலின் 12th மேன் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 12th மேன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 20, 2022, 02:36 PM IST
  • 12th மேன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது.
  • சமீபத்தில் ப்ரோ டாடி படம் வெளியானது.
  • ஜீத்து ஜோசபுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
மோகன்லாலின் 12th மேன் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!  title=

திரிஷ்யம் 1 மற்றும் திரிஷ்யம் 2 ஆகிய இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணி மூன்றாவது முறையாக 12th மேன் படத்தில் இணைந்தது. இப்படம் மிகவும் குறுகிய கால படமாக எடுக்கப்பட்டு இருந்தது. திரிஷ்யம் 2 படத்தை போலவே இப்படமும் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகியுள்ளது.  சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ப்ரோ டாடி படமும் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது.  

mohanlal

மேலும் படிக்க | திரை விமர்சனம்: நெஞ்சுக்கு நீதி - சமூக நீதி பேசும் தரமான சினிமா

நண்பரின் திருமண பார்ட்டிக்காக 11 பேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் பார்ட்டி செலிபிரேட் செய்ய ஒரு ரிசார்ட் புக் செய்கின்றனர்.  பின்பு அங்கு பார்ட்டியை கொண்டாட தொடங்குகின்றனர்.  இதற்கிடையில் அங்கு ஏற்கனவே தங்கி இருக்கும் மோகன்லால்க்கும், 11 பேருக்கு இடையில் சிறிய பிரச்சினை ஏற்படுகிறது. பிறகு அந்த 11 பேரில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.  இதன் பின்பு மோகன்லால் ஒரு போலீஸ் என்பது தெரிய வருகிறது.  பின்பு, இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை தன்னுடைய பாணியில் கண்டுபிடிக்கிறார் மோகன்லால். இதுவே 12th மேன் படத்தின் ஒன்லைன்.

mohanlal

மோகன்லாலை தவிர இக்கதையும் வேறு யாரும் நடிக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.  குறிப்பாக இப்படி ஒரு ஓப்பனிங் காட்சியில் நடிக்க வேறு எந்த ஒரு நடிகரும் ஒத்துக்கொள்ள மாட்டார்.  அந்த அளவிற்கு கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ளார்.  படம் ஆரம்பித்ததில் இருந்து ஒரு மாதிரியும், இரண்டாம் பாதியில் வேறு வித நடிப்பையும் கொடுத்துள்ளார் மோகன்லால்.  படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களில் அனைவரும் மலையாள பின்புலம் கொண்ட நடிகர்கள் என்பதால் ஆரம்பத்தில் அவர்களுடன் நம்மால் கனக்ட் செய்து கொள்ள முடிவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் நாமே கதையுடன் ஒன்றி போகும் அளவிற்கு திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

mohanlal

எழுத்தாளர் கே.ஆர். கிருஷ்ண குமார் திரில்லர் கதைக்கேற்ப சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார்.  பின்னணி இசையும், கேமரா ஒர்க்கும் 12th மேன் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.  கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்த படம் ஆரம்பத்தில் சிறிது தொய்வுடனே நகர்கிறது.  கதையின் உள்ளே செல்ல சிறிது நேரம் எடுத்து கொள்கிறது.  பிறகு படம் முடியும் வரை ஓவ்வொரு காட்சியிலும் நம்மை ஆச்சர்யபடுத்துகிறது.  குறிப்பாக படத்தொகுப்பு சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.  திரில்லர் பட பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்துதான் இந்த 12th மேன்.

மேலும் படிக்க | விக்ரம் படத்தை தூக்கி பிடிக்கப்போவதே சூர்யா தான் - கமல்ஹாசன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News