முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படம் 2020 ஜூன் 26-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் முதல் பார்வரை போஸ்டரை இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெ-வாக நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தலைவி. இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி புகழ்பெற்ற அரசியல்வாதி எம்.ஜி.ராமச்சந்திரன் கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார்.
#thalaivi ... let’s listen to some retro soon pic.twitter.com/SXFcfkeAjk
— G.V.Prakash Kumar (@gvprakash) November 23, 2019
கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி நடித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தினை பாகுபலி எழுத்தாளர் கே.வி. விஜயேந்திர பிரசாத் மற்றும் ரஜத் அரோரா இணைந்து எழுதியுள்ளனர். பாகுபலி தொடர் மற்றும் பஜ்ரங்கி பைஜான் போன்ற வெற்றி கதைகளை எழுதியவர் கே.வி.விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவி திரைப்படம் விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ், பிளேட் ரன்னர் மற்றும் கேப்டன் மார்வெல் இத்திரைப்படத்தில் பங்கெடுத்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படம் வரும் 2020-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.