பிக்பாஸ் தமிழ் போட்டியாளராகும் பிரபல நடிகையின் தம்பி; பறவை பெயர் கொண்ட விஜய் டிவி பிரபலம்

விரைவில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்க இருக்கும் நிலையில், அதில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கும் 3 பேர் குறித்த தகவல் லீக்காகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 1, 2022, 10:04 AM IST
  • பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்கள் லிஸ்ட் லீக்
  • வீட்டிற்குள் செல்லும் பிரபல நடிகையின் தம்பி
  • பறவை பெயர் கொண்ட விஜய் டிவி பிரபலம் செல்கிறாராம்
பிக்பாஸ் தமிழ் போட்டியாளராகும் பிரபல நடிகையின் தம்பி; பறவை பெயர் கொண்ட விஜய் டிவி பிரபலம்

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகினாலும், பிக்பாஸ் சீசன் 6 தமிழுக்கு மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கிவிட்டார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்காக அவரின் புரோமோ வீடியோவையும் விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இதற்கு முன்னர் சீசன்களைவிட இந்த சீசன் பிரம்மாண்டமாகவும், புதிய உயரத்தை எட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் விஜய் டிவி, அதற்கேற்ப போட்டியாளர்களை தேர்வு செய்திருக்கிறதாம். 

மேலும் படிக்க | தெலுங்கு மக்களே 'பொன்னியின் செல்வன்’ உங்கள் படம் - சுஹாசினி சர்ச்சை பேச்சு

கடந்த சீசன்களை திரும்பிப்பார்க்கும்போது வெள்ளித் திரை பிரபலம், மாடலிங் துறை, தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், கிராமத்து பாடகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள், பிரபலங்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அதே ஃபார்முலாவின் அடிப்படையில் தான் இந்த முறையும் போட்டியாளர்களை தேர்வு செய்திருக்கிறதாம் பிக்பாஸ் டீம். இப்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, 4 முறை சைமா விருதுகளை வென்ற பிரபல நடிகையின் சகோதரர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறாராம். அடுத்ததாக விஜய் டிவியில் இருக்கும் பறவை பெயர் கொண்ட நடிகை, தொகுப்பாளினியும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளாராம். 

மாடலிங் துறையில் இருந்து சூப்பர் மாடல் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் பிக்பாஸ் டீம், யூடியூப்பில் பிரபலமாகவும், பிக்பாஸ் விமர்சகராகவும் அறியப்படும் ஒருவரிடமும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறதாம். அவருக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றது. அதனால் அவர் பங்கேற்பாரா? என தெரியவில்லை. எல்லா சீசன்களைப் போலவே இந்த சீசன்களிலும் சர்ச்சைக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் வராத வகையில் போட்டியாளர்களை தேர்வு செய்திருக்கும் பிக்பாஸ் குழு, டாஸ்குகளிலும் வித்தியாசம் காட்ட இருக்கிறது. இதற்கான அனைத்து தயாரிப்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறதாம் பிக்பாஸ் குழு. கட்டாயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை இந்த சீசன் பூர்த்தி செய்யும் என அடித்து சொல்கின்றனர் அந்த குழுவில் இருப்பவர்கள்.

மேலும் படிக்க | செப்டம்பர் 30 - த்ரிஷாவுக்கு ஸ்பெஷல்; காரணம் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News