விஜய் படத்தின் வில்லன் நானியா? உண்மை பின்னணி!

விஜய் நடிக்கும் Thalapathy 66 படத்தில் வில்லனாக நடிக்க நானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2021, 06:49 PM IST
விஜய் படத்தின் வில்லன் நானியா? உண்மை பின்னணி!  title=

தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  நெல்சன் இயக்கும் இப்படத்தில் விஜய் ஒரு ராணுவ சீக்ரெட் ஏஜென்டாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.  மேலும் இப்படம் பொங்கல் அல்லது ஏப்ரல் 2010 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பார்க்காத விதமாக தளபதி 66 படத்தின் அப்டேட் வெளியானது.  இப்படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் என்றும் தில் ராஜ் இப்படத்தை தயாரிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  படத்தில் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது இப்படத்தின் வில்லன் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

 

தெலுங்கில் மிகப்பெரிய நடிகரான நானியை தளபதி 66 படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  மேலும் கதாநாயகியாக கிராஅத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தளபதி 66 படத்தின் கதை அப்பா மற்றும் பெண் குழந்தைக்கு இடையில் நடக்கும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இப்படத்தின் அறிவிப்பை பெண் குழந்தைகள் தினத்தில் படக்குழு அறிவித்துள்ளது. குழந்தை வேடத்தில் நடிக்க மகேஷ்பாபுவின் பெண் சித்ராவை நடிக்க வைக்க பேசி வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

தற்போது விஜய் நடிக்கும் படங்கள் தமிழகம் தாண்டி மற்ற மொழிகளிலும் பெரிய ஹிட் அடிப்பதால் மற்ற மொழி நடிகர்களையும் இப்படத்தில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறது படக்குழு.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News