மீண்டும் இணையும் நயன் - அட்லீ கூட்டணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய்-ன் 63-வது திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதிப் படுத்துப்பட்டுள்ளது!

Last Updated : Nov 26, 2018, 10:49 AM IST
மீண்டும் இணையும் நயன் - அட்லீ கூட்டணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு! title=

நடிகர் விஜய்-ன் 63-வது திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதிப் படுத்துப்பட்டுள்ளது!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. AGS எண்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தில் விஜய் - அட்லி - ARR கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

அதேவேலையில் சிம்டாங்காரம் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மெர்சல் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த GK விஷ்ணு இப்படத்திலும் இணைந்துள்ளார். நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிகர் விவேக் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜா ராணி திரைப்படத்திற்கு பின்னர் இயகுநர் அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News