SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் பேசியதாவது, நான் பாடலாசிரியாக பணியாற்றிய 3வது திரைப்படம் இது. இசையமைப்பாளர் பிஜே அவர்களுக்கு என் நன்றிகள். பல வருடங்களாக திரையில் இருக்கும் அவர் இன்னும் பெரிய இடத்தை அடைய வேண்டும். எனக்கு இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் வாய்ப்புத் தந்துள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி
மேலும் படிக்க | இது எனக்கு மறக்க முடியாத நாள்! நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்!
இசையமைப்பாளர் பிஜே பேசியதாவது, எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும் அதனால் மன்னிக்கவும். தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வயநாடு ஏரியாவைச் சேர்ந்தவன் அங்கு ரஜினி கமல் படங்கள் தான் அதிகம் ஓடும். இந்தப்படத்தின் வாய்ப்பு எதிர்பாராததது. எனக்கு ராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் சார் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவர்களால் தான் இசையமைப்பாளர் ஆக ஆசைப்பட்டேன் தமிழக ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் நன்றி. நடிகர் ஆதர்ஷ் பேசியதாவது, எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டுமே தெரியும். மணி பிரசாத் சார், மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் என் நன்றிகள். நான் புதுமுகம். உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி.
நடிகர் சாப்ளின் பாலு பேசியதாவது, ஒரு சின்ன கேரக்டர் தான் நடிக்கப் போனேன், எனக்குப் பெரிய கேரக்டர் தந்து, படம் முழுக்க வரவைத்து விட்டார் இயக்குநர். கஷ்டப்படும் நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் வாய்ப்பு தருகிறேன் என்று தயாரிப்பாளர் சொன்னார், அவர் மனதிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நடிகர் விஜய் விஷ்வா பேசியதாவது, என் சுவாசமே இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் முன்னமே பார்த்தேன். மொபைலின் பார்க்கும் போதே அவ்வளவு அழகாக இருந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் கூப்பிட்டு பாராட்டியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளப் பேச்சு கேட்க அவ்வளவு அழகாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சின்னப்படங்கள் வியாபரத்தில் சினிமா சங்கங்கள் உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் பேரரசு பேசியதாவது, KULAPPULLI லீலா அம்மா அவர்களுக்கு என் முதல் வணக்கம். நீங்கள் இங்கு வந்தது நிறைவு. என் சுவாசமே டைட்டில் மட்டும் தமிழில் இருக்கிறது மற்றதெல்லாம் மலையாளம் தான். இங்கு யாரும் மொழியைப் பெரிதாக பார்ப்பதில்லை. எல்லோரையும் கொண்டாடுவார்கள். மலையாளத்தில் இருந்து கன்னடத்திலிருந்து, இந்தியிலிருந்து எல்லாம் படங்கள் இங்கு ரீமேக் ஆகும். இங்கு நாக்கள் அனைவரையும் கொண்டாடுவோம். என் சுவாசமே படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, என் சுவாசமே.. மலையாளத்திலிருந்து படமெடுக்கிறவர்கள் நல்ல தமிழ் டைட்டில் வைக்கிறார்கள் ஆனால் தமிழில் ஆங்கில டைட்டில் வைக்கிறார்கள். எங்கு போனது தமிழ்ப்பற்று. இந்தப்படத்தில் 3 பாடல்கள் போட்டுக்காட்டினார்கள். அத்தனை அற்புதமாக இருந்தது. இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பது இன்னும் பலம். மலையாள சினிமாவில் எப்பவும் கதைக்காகத் தான் ஹீரோ. ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள் அநாவசிய செலவு செய்ய மாட்டார்கள், இங்கு ஏவிஎம்மில் ஷீட்டிங் வைத்தாலும் கேரவன் கேட்கிறார்கள். மம்முட்டி தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதே இல்லை. அவரே சொந்தமாக கேரவன் வைத்துக்கொண்டுள்ளார். இதையெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவிற்கு கடுமையான சென்சார் கெடுபிடிகள் இருக்கிறது ஆனால் வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லை அதில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. மத்திய அரசு வெப் சீரிஸிற்கும் சென்சார் கொண்டு வர வேண்டும். என் சுவாசமே படத்தை சிறப்பான படமாக கொண்டு வந்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ