கடந்த புதன்கிழமையன்று நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், தற்போது நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களது அக்கவுண்டுகளை பிறருடன் பகிர்ந்துகொண்டால் கட்டணம் வசூலிக்கும் சோதனையை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சார்ந்த நெட்ப்ளிக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவையானது நீண்ட காலமாகவே அதன் சந்தாதாரர்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்களது நண்பர்களுடன் அக்கவுண்டை பகிர்ந்து கொள்வதை பெரிய விஷயமாக கருதாமல் வந்தது. ஆனால் தற்போது அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட வளர்ச்சியின் அளவு தற்போது இதை பற்றி அவர்களை யோசிக்க செய்துள்ளது.
மேலும் படிக்க | 'டான்' படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி!
தற்போதுள்ள இயங்குதளங்கள் ஒன்றுடன் ஒன்று கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பல்வேறு சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது, இந்த தளம் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நெட்ப்ளிக்ஸ் ப்ராடக்ட் இன்னோவேஷன் இயக்குனர் செங்யி லாங் கூறுகையில், இனிவரப்போகும் காலங்களில் சிலி, கோஸ்டா ரிகா மற்றும் பெரு போன்ற இடங்களில் உள்ள நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு சப் அக்கவுண்ட் என்கிற ஆப்ஷன் வழங்கப்பட்டு, இரண்டு நபர்கள் அக்கவுண்டை பயன்படுத்தும் வகையிலும், இதற்கென்று கட்டணமாக $2 முதல் $3 வரையில் மாதந்தோறும் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் லாங் கூறுகையில், மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து நாங்கள் அறிகிறோம், வடிக்கையாளர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வுகளை வழங்க நாங்கள் முழுமுயற்சி செய்து வருகிறோம், சந்தாதாரர்கள் அளிக்கும் கட்டணங்கள் எங்கள் தளத்தின் மேம்பாட்டிற்கு உதவும் என்றும் கூறியுள்ளார். சப் அக்கவுண்ட் மூலம் ஏற்கனவே அக்கவுண்டுகளை பகிர்ந்துகொண்டவர்களின் ப்ரோபைல்களை மாற்றவும் மற்றும் ஹிஸ்டரிகளை பார்க்கவும் நெட்ப்ளிக்ஸ் அனுமதியளிக்கிறது.
இந்த கட்டணம் வசூலிக்கும் சோதனையை மற்ற நாடுகளில் செயல்படுத்துவதை காட்டிலும், முதல்கட்டமாக மூன்று இடங்களில் மட்டும் செயல்படுத்தி பார்க்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியதால், நெட்ப்ளிக்ஸ் தளத்தை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 221.8 மில்லியனாக இருந்தது. ஆனால் இந்த 2022ம் ஆண்டின் கால் பகுதியில் அவ்வளவாக சந்தாதாரர்கள் எண்ணிக்கை உயரவில்லை, 2.5மில்லியன் சந்தாதாரர்கள் மட்டுமே வந்துள்ளதாக நெட்ப்ளிக்சின் அறிக்கை கூறுகிறது. இதில் கிட்டத்தட்ட 8.3 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் வட அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்று இந்நிறுவனம் கூறுகிறது.
மேலும் படிக்க | அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR