தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.
நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபியை அன்பால திருத்த முடியாது தன்னுடைய வேலையை காட்டித்தான் திருத்தணும் என சுடர் முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மனோகரியிடம் பொய் சொல்லும் சுடர்
அதாவது சுடர் பாஸ்போர்ட் ஏஜென்சி ஆபிசுக்கு வந்திருக்க அதை மனோகரி பார்த்துவிட்டு சுடருக்கு போன் போட்டு எங்க இருக்க என்று விசாரிக்க அவள் அடையாறில் இருப்பதாக பொய் சொல்ல இவளுக்கு சந்தேகம் வருகிறது.
இதையடுத்து எழிலிடம் வரும் மனோகரி சுடரை பத்தி நல்லா விசாரிச்சியா? அவ்வளவு பெரிய பேக்ரவுண்ட் என்னனு தெரியுமா சர்டிபிகேட் எல்லாம் வாங்கி பார்த்தியா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அவளை 30 நாள்ல எப்படியும் போய் வா அவளை பத்தி எதுக்கு இதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கேன். அதுவுமில்லாம அம்மா தான் அவள வேலைக்கு எடுத்தாங்க அம்மா அவ ரொம்ப நல்லவன்னு தான் சொல்றாங்க என்று சொல்லி திட்டி அனுப்ப மனோகரி எனக்கும் எழிலுக்கும் நடுவில் யாரும் வரக்கூடாது, வந்தா சும்மா விடமாட்டேன் என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள்.
அதைத்தொடர்ந்து குழந்தைகளை ஸ்கூலில் டிராப் செய்யும் சுடர் அபியை மட்டும் ஒரு நிமிஷம் என் கூட வா என்று ஒரு டீக்கடைக்கு கூட்டிச்சென்று டீ மாஸ்டரை காட்டி இவரை பார்த்தா உனக்கு என்ன தோணுது என்று கேட்க அபி ஒன்னும் தோணல என்று சொல்கிறாள்.
அதைத்தொடர்ந்து ஒரு மெக்கானிக் ஷாப் கூட்டிட்டு போய் இந்த மெக்கானிக் பார்த்தால் என்ன தோணுது என்று கேட்க அப்போதும் ஒன்றும் தோணல என சொல்கிறாள். கடைசியாக ஆட்டோ டிரைவர் ஒருவரை காட்டி அவரைப் பார்த்த என்ன தோணுது என்று கேட்க யாரை பார்த்தாலும் எனக்கு எதுவும் தோணுல என்று அபி கோபப்படுகிறாள்.
பிறகு அவளை ஸ்கூலுக்கு கூட்டி வந்து அங்கிருக்கும் பசங்களை காட்டி இவர்களில் டீக்கடைக்கார குழந்தையும் படிக்கிறாங்க, மெக்கானிக்கோட குழந்தையும் படிக்கிறாங்க, ஆட்டோக்காரரோட குழந்தையின் படிக்கிறாங்க அவங்க யாருமே கண்டுபிடிச்சு சொல்லு என்று கேட்க அது எப்படி கண்டுபிடிக்க முடியும் இது ஸ்கூல் இங்கே எல்லாரும் யூனிபார்ம் ல தான் இருப்பாங்க என்று சொல்கிறாள்.
அபிக்கு அட்வைஸ் செய்யும் சுடர்
அதேதான் இங்கு எல்லாரும் ஒரே மாதிரி இருக்கும்போது நீ மட்டும் மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தா யாரும் உன்னை பிரண்டா ஏத்துக்க மாட்டாங்க என்று அட்வைஸ் சொல்ல அபி முகம் மாறுகிறது. அடுத்து மனோகரி வீட்டில் செல்வியை வைத்துக்கொண்டு குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்க்க அப்ளிகேஷன் ரெடி செய்து கொண்டு அதைப்பற்றி பேச இதைக் கேட்ட ராமையா யார் ஹாஸ்பிடல்ல சேர்க்க போறீங்க என கேட்கிறார்.
மேலும் படிக்க | Lover OTT: லவ்வர் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியானது செம அப்டேட்
மனோகரி குழந்தைகளை தான் ஹாஸ்பிடல்ல சேர்க்க போறேன் என்று சொல்ல எழில் தம்பிக்கு ஆதரவா இருக்கிறது குழந்தைங்க தான் அவங்கள பிரிக்கப் போறீங்களா என்று கேட்கிறார். நீ இங்க டிரைவர் தானே அந்த வேலையை மட்டும் பாரு என்று ராமையாவை அவமானப்படுத்த அவர் மனம் உடைந்து போய் வெளியே வந்து உட்காருகிறார்.
அடுத்ததாக கவின் மனோகரியுடன் நெளிந்து நெளிந்து செல்ல என்ன விஷயம் என்று கேட்க ஸ்கூல்ல ரேங்க் சீட் கொடுத்து இருக்காங்க எல்லாத்துலயும் மார்க் கம்மியா எடுத்திருக்கேன் அப்பா கையெழுத்து போட மாட்டாரு என்று சொல்ல நீதான் நல்லா டிராயிங் பண்ணல உங்க அப்பாவோட கையை வைத்தேன் நீயே போட்டுக்க நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன் என்று சொல்லி கவினை ரேங்க் சீட்டில் கையெழுத்து போட வைக்கிறாள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?
நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ