)
TV Serial Ninaithen Vandhai (Zee Tamil Inputs): தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுவுக்கும் மாயாவுக்கும் ஒரே மேடையில் வைத்து நிச்சயம் முடித்து விடலாம் என்று இரண்டு குடும்பமும் முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, நிச்சயதார்த்தம் அன்று காலையில் எழுந்ததும் மதுமிதா ஏதோ படபடப்பாக இருப்பதாக நினைத்து வருத்தத்தில் இருக்கிறாள், அதே போல் மறுபக்கம் மாயா கல்யாணமாகி வேற வீட்டிற்கு போக போகிறாள் என்று கௌதம் வருத்தத்தில் இருக்க சகுந்தலா அவனை கூல் செய்கிறான்.
இதனை தொடர்ந்து நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க இரண்டு குடும்பமும் சந்தோஷத்தில் இருக்க திடீரென சந்தோஷ்க்கு ஒரு போன் கால் வர அவன் பதற்றத்துடன் யாருக்கும் சொல்லாமல் காரை எடுத்து கொண்டு கிளம்பி செல்கிறான்.
ஒரு பக்கம் சந்தோஷ் வேகவேகமாக கார் ஓட்டி கொண்டு சென்று ஒருவரை பார்க்க இங்கே மதுவுக்கும் கௌதம் பார்த்த மாப்பிள்ளைக்கும் இடையே நிச்சய ஏற்பாடுகள் நடக்க மாலை மாற்றி கொண்டு மோதிரம் போட போகும் சமயத்தில் அங்கு வரும் சந்தோஷ் கௌதமிடம் சில ஆதாரங்களை காட்ட அந்த நபருக்கு ஏற்கனேவே கல்யாணம் ஆகி விட்டது என்ற உண்மை தெரிய வருகிறது.
இதனால் மோதிரம் போட போகும் கடைசி நொடியில் கௌதம் நிச்சயத்தை நிறுத்தி உண்மையை உடைக்க மாப்பிள்ளையாக வந்தவன் இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான்.. நீங்க நல்ல ஆபர் கொடுத்தீங்க. அதனால் தான் கல்யாணம் ஆனதை மறைத்ததாக சொல்ல மதுவின் குடும்பத்தினர் மாப்பிள்ளையை பத்தி நல்லா விசாரிக்க மாட்டீங்களா என்று கோபப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ