வெளியே துரத்தும் எழில்.. சவால் விட்டு சுடர், வேற மாதிரி சூடு பிடிக்கும் நினைத்தேன் வந்தாய்

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 21, 2024, 12:51 PM IST
  • நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வெளியே துரத்தும் எழில்.. சவால் விட்டு சுடர், வேற மாதிரி சூடு பிடிக்கும் நினைத்தேன் வந்தாய்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பேய்க்கு பயந்து சுடர் எழிலை கட்டி பிடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Zee News as a Preferred Source

கேர் டேக்கராக வந்திருக்கும் பெண் சுடர் தான் என்பதை எழில் அறிய அதிர்ச்சி அடைகிறான். உன்கிட்ட புள்ளைகள் வளர்ந்தா ரவுடியாக தான் வளருவாங்க என்று திட்டி வெளியே போக சொல்ல சுடர் வெளியே போனால் எனக்கு என்ன வேலையா கிடைக்காது என்று மீண்டும் அந்த ஹாஸ்டல் தோழிக்கு போன் செய்ய அவள் உன்னால் நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன் என்று திட்டி போனை வைத்து விடுகிறாள். 

மேலும் படிக்க | Trisha: ‘அருவருப்பா இருக்கு..’ கூவத்தூர் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! ட்வீட் இதோ..

இதனால் சுடர் எப்படியாவது இங்க தான் இருந்தாகணும் என்று முடிவெடுத்து எழிலிடம் வந்து எப்படி நீங்க என்னை பார்த்து ரவுடின்னு சொல்லலாம், ஒரே ஒரு மாசம் டைம் கொடுங்க உங்க பசங்களை நான் மாத்தி காட்டுறேன் என்று சவால் விட முதலில் யோசிக்கும் எழில் பிறகு சவாலுக்கு ஓகே சொல்ல குழந்தைகள் அப்பாவையே இந்த அதட்டு அதட்டுறா, நம்மள அடிக்க கூட செய்வா போலயே. இவ நமக்கு வேண்டவே வேண்டாம். எப்படியாவது வெளியே துரத்தணும் என்று பிளான் போடுகின்றனர். 

செல்வி மனோகரிக்கு போன் செய்து அந்த சுடர் இந்துமதி போலவே பேசுறா என்று சொல்கிறாள். பிறகு குழந்தைகள் எல்லாத்துக்கும் காரணம் கவின் தான் என்று திட்டுகின்றனர். சுடரை எப்படியாச்சும் அனுப்பிடனும், அதுவரைக்கும் அவ கிட்ட கொஞ்சம் பார்த்து தான் நடந்துக்கணும் என முடிவெடுக்கின்றனர். 

இதனை தொடர்ந்து எழில் ஹாஸ்பிடல் வர அவனுடன் பார்ட்னர்ஷிப் வைத்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் தொந்தரவு செய்ய எழில் முடியாது என்று துரத்தி விடுகிறான், வீட்டில் குழந்தைகள் சுடரை டார்ச்சர் செய்ய அடுத்த பிளான்களை தீட்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கூவத்தூருக்கும் த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன 25 லட்சம்? முழு விவரம் இங்கே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News