‘மாமன்னன்’ to ‘ரெஜினா’ இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்..!

This Week OTT releases Check List: வீக் எண்டில் போர் அடிக்குதா..? என்ன படம் பாக்கலாம்..? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்ட் இதோ..!

Written by - Yuvashree | Last Updated : Jul 27, 2023, 04:54 PM IST
  • இந்த வாரம் பல த்ரில்லர் படங்கள் வெளியாகின்றன.
  • அதில், ரெஜினா மற்றும் மாமன்னன் போன்ற படங்களும் இடம் பெற்றுள்ளன.
  • வீக் எண்டில் இதில் எந்த படத்தை பார்க்கலாம்..? முழு விவரம்
‘மாமன்னன்’ to ‘ரெஜினா’ இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்..! title=

திரையரங்குகளில் படங்களை குடும்பத்துடன் சென்று பார்க்கும் காலம் மலையேறி இன்று அனைத்து படங்களையும் ஓடிடியில் பார்க்கும் காலம் வந்து விட்டது. திரையரங்கில் வெளியான சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்குள்ளாகவே படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு ஓடிடி தளத்தில் வெளிவந்து விடுகின்றன. வாரா வாரம் தியேட்டர்களில் புது படம் வெளியாகிறதோ இல்லையோ, ஓடிடி தளங்களில் புதுசு புதுசாக தொடர்களும் படங்களும் வெளியாகின்றன. அந்த வரிசையில் இன்று மாமன்னன் உள்பட பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்று பர்ப்போமா..?

மாமன்னன் திரைப்படம்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்திருந்த படம், மாமன்னன். நகைச்சுவை நடிகர் வடிவேலு சிறந்த குணச்சித்திர நடிகராக உருவெடுத்துள்ள படம் இது. மாமன்னன் படம், உதயநிதி ஸ்டாலினுக்கு கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இதில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில்தான் வில்லன். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏவிற்கும் அவர் வசிக்கும் கிராமத்தை சேர்ந்த சாதி செல்வாக்கு பெற்ற ஒருவனுக்கும் நடக்கும் பிரச்சனைதான் மாமன்னன். 

ஓடிடி ரிலீஸ்:

மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியானது. மாரி செல்வராஜ் தேவர் மகன் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறியதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் படம் வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியது. இதையடுத்து, திரையரங்கில் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகிறது ‘போர் தொழில்’ படம்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

ரெஜினா:

பிரபல தமிழ் நடிகை சுனைனா நடித்திருந்த படம் ரெஜினா. வங்கி கொள்ளையில் தன் கணவனை இழக்கும் பெண் அவர்களை பழிவாங்குவது போல எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் ரெஜினா. சுனைனா இந்த படத்தின் மூலம் முதன் முறையாக பெண்ணை சுற்றி நிகழும் கதையில் நடித்திருந்தார். படம் மக்களிடையே ஓரளவு வரவேற்பினை பெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியான இப்படம், நாளை (ஜூலை 28) அமேசான் ப்ரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்பை:

இந்த வருடம் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் ஸ்பை மற்றும் போலீஸ் த்ரில்லர் படங்கள் வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்றன. அப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்களுள் ஒன்று, ஸ்பை. தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த இந்த படத்தில் நிக்கில் சித்தார்த்தா ஹீரோவாக நடித்திருந்தார். பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தின் நாயகியாக வந்தார். படங்களை ரேட்டிங் செய்யும் தளமான ஐ.எம்.டி.பி இந்த படத்திற்கு 10க்கு 8.3 ரேட்டிங் கொடுத்துள்ளது. இந்த படம் இன்று முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. 

பிற படங்கள்:

மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி இன்னும் சில படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா..?

அப்பத்தா-தமிழ்-ஜியோ சினிமா
கொல்லா-மலையாளம்-மனோரமா மேக்ஸ்
சமாஜவராகமனா-தெலுங்கு-ஆஹா
போலீஸ் ஸ்டோரி கேஸ்1-தெலுங்கு-ஈ.டி.வி வின்
ட்விஸ்டட் மெட்டல்-ஆங்கிலம்-சோனி லிவ் சீரீஸ்
கால் கூட்-இந்தி-ஜியோ சீரீஸ்
ஒன் ஃப்ரைடே நைட்-இந்தி-ஜியோ சினிமா

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா அரங்கில் அசம்பாவிதம்! மின்சாரம் தாக்கி ஊழியருக்கு படுகாயம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News