உலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பத்மாவதி எனும் ''பத்மாவத்'' திரைப்படம் வரும் ஜன.,25-ஆம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர், எனினும் இப்படத்தினை ராஜஸ்தானில் வெளியிட அம்மாநிலம் மறுத்துள்ளது!
சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்திரைப்படம் குறித்து தொடர்ந்து பல சர்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு U/A சான்றிதழினை டெல்லி திரைப்பட தனிக்கை குழு அளித்துள்ளது. இதனையடுத்து இன்று இப்படம் வரும் ஜனவரி 25-ஆம் நாள் 'பத்மாவத்' என்ற பெயரில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தினை ராஜஸ்தானில் வெளியிட அனுமதிக்க இயலாது என ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கதாரியா தெரிவித்துள்ளார்!
Following earlier orders of Rajasthan Chief Minister Vasundhara Raje, movie '#Padmavat' will not be released in the state: Gulab Chand Kataria, Rajasthan Home Minister pic.twitter.com/rDQVltZSeo
— ANI (@ANI) January 8, 2018