“சாஹோ” படத்தின் ‘மழையும் தீயும்’ வீடியோ பாடல் வெளியானது

ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ள பிரமாண்டமான திரைப்படம் சாஹோ படத்தின் "மழையும் தீயும்" என்னும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 2, 2019, 06:15 PM IST
“சாஹோ” படத்தின் ‘மழையும் தீயும்’ வீடியோ பாடல் வெளியானது
Pic Courtesy : Youtube Grab

புதுடெல்லி: ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ள பிரமாண்டமான திரைப்படம் சாஹோ படத்தின் "மழையும் தீயும்" என்னும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படம் சாஹோ. இத்திரைப்படத்தின் வீடியோ பாடல் ஓன்று வெளியாகி உள்ளது. 

இயக்கிநர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நாயகி ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடையாததால், ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இப்படத்திலிருந்து "மழையும் தீயும்" என்னும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.