Video: இந்தி ரசிகர்களையும் விட்டு வைக்காத பிரியா பிரகாஷ்!

இணையப்புகழ் பிரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது!

Updated: May 6, 2018, 10:35 AM IST
Video: இந்தி ரசிகர்களையும் விட்டு வைக்காத பிரியா பிரகாஷ்!
Screengrab (Youtube)

இணையப்புகழ் பிரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது!

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயன் படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.

இந்நிலையில் இவர் தற்போது இவரது சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனது நண்பர திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் தனது நண்பர்களுடன் இணைந்து ஹவா ஹவா என்னும் இந்தி பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது.

முன்னதாக இவரும், இவரது இணை நடிகர் ரோஷனும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.