தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் வேட்பு மனு நிறுத்தம்

விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 5, 2017, 10:56 AM IST
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் வேட்பு மனு நிறுத்தம் title=

சென்னை: விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 5-ம் தேதி நடக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் வேட்புமனுவை கமல் ஹாஸன் முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார்.

அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடவுள்ளனர். இதனையடுத்து அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் ராஜேஸ்வரன் கூறுகையில்:-

"தயாரிப்பாளர் சங்க தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் 5-ம் தேதி நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்படும். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 6 பேரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விஷாலின் வேட்பு மனுவிற்கு ஏதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாட இருப்பதால் அவருடைய மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவை பொறுத்து அவரது மனு பரிசிலிக்கப்படும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending News