புலி முருகன் படைத்த இமாலய சாதனை!!

Last Updated : Nov 8, 2016, 02:24 PM IST
புலி முருகன் படைத்த இமாலய சாதனை!!

மலையாள சினிமாவில் இருந்து முதன்முறையாக 100 கோடி கிளப்பிற்குள் நுழைந்துள்ளது மோகன்லால் நடித்து கடந்த மாதம் வெளியான புலி முருகன் படம். சினிமாவில் தற்போது ரூ 100 கோடி வசூலானதான் அந்த படத்திற்கு கௌரவம். முதன் முறையாக அந்த கனவு நிறைவேறியுள்ளது, மோகன்லால் நடித்த புலிமுருகன் உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளரான தோமிச்சன் முளகுபாடம் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த மகிழ்சிசியை தனது சமுக வலைத்தளத்தில்பகிர்ந்துள்ள மோகன்லால், இந்த சாதனையை சொந்தமாக்க உதவிய தயாரிப்பாளர் தோமிச்சன், இயக்குனர் வைசாக், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் மற்றும் மராட்டிய படங்களே இதுவரை ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வந்தது. மலையால படங்களுக்கு இந்த ரூ 100 கோடி எல்லாம் கனவாகவே இருந்தது. தற்போது முதன் முறையாக அந்த கனவு நிறைவேறியுள்ளது.

More Stories

Trending News