இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர்தான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Bigg Boss Season 6: சிறந்த போட்டியாளராகவும், பலருக்கும் பிடித்த போட்டியாளராகவும் இருக்கும் ரச்சிதா மகாலக்ஷ்மி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 7, 2023, 10:03 AM IST
  • ரச்சிதா இந்த வாரம் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
  • விஜய் சீரியல் மூலம் பிரபலமானார்.
  • இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர்தான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!  title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கான நிகழ்ச்சி மட்டுமின்றி பலருக்கும் கன்டென்ட் கொடுக்கும் குருவாக விளங்கி வருகிறது.  இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முடியும் வரை பல ஊடகங்களுக்கும் கன்டென்ட் கொடுத்து வருகிறது, இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் உள்ளனர்.  இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது, வழக்கம்போல முதல் ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  கிட்டதட்ட 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது, இந்நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

மேலும் படிக்க | விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் புதிய சிக்கல்!

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியேற்று படலம் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.  அதில் இந்த ஞாயிற்றுக்கிழமை பலருக்கு பிடித்த ஒரு பிரபலமான முகம் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறது.  அது யாரென்றால் ரச்சிதா மகாலக்ஷ்மி தான், சிறந்த போட்டியாளராகவும் பலருக்கும் பிடித்த போட்டியாளராகவும் இருக்கும் இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப்போவது நிச்சயம் இவரது ரசிகர்களுக்கு மிகவும் ஷாக்காக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கிடமில்லை.  நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சைலன்ட் ஆகவே இருந்து வந்த ரச்சிதா இப்போது தான் கொஞ்சம் தன்னை வெளிக்காட்ட தொடங்கியுள்ளார், இந்நிலையில் அவர் வெளியேற்றப்பட இருப்பது சற்று கவலையாக தான் இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை வரை ரச்சிதா தான் இருப்பர் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் அவர் இருக்கப்போகும் இறுதி நாளாக மாறிவிட்டது.  இதுவரை இந்த வீட்டிலிருந்து ஜி.பி.முத்து, சாந்தி மாஸ்டர், அசால் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், அயீஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.  அமுதவாணன் அல்லது அசீம் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்று கூறப்படுகிறது, இருவருமே விஜய் டிவியின் பிரபலமான முகங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னராக போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  அமுத வாணன் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | அஜித் - விக்னேஷ் சிவன் படம்... வில்லனாக தனி ஒருவன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News