2.0: வில்லன் அக்ஷய் குமார் பற்றி புதிய தகவல்!!

Updated: Nov 8, 2017, 10:03 AM IST
2.0: வில்லன் அக்ஷய் குமார் பற்றி புதிய தகவல்!!

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் படம் 2.0. 

அண்மையில்தான் துபாயில் பிரமாண்டமாக ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் ஒருவித வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு மொத்தம் 12 கெட்டப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 2.0 படத்தில் அக்ஷய் குமாருக்கு 12 கெட்டப் என்ற தகவல் ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.