கொரோனா தொற்றால் ரகுல் ப்ரீத் சிங் பாதிப்பு

பிரபல தமிழ், தெலுங்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங், கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ததாகவும், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 22, 2020, 04:00 PM IST
கொரோனா தொற்றால் ரகுல் ப்ரீத் சிங் பாதிப்பு

பிரபல தமிழ், தெலுங்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங், கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ததாகவும், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh) இந்த செய்தியை சமூக ஊடகங்களில் அறிவித்தார், மேலும் அவர் நன்றாக இருப்பதாக உணர்கிறார், நன்றாக ஓய்வெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்புக்கு வந்த அனைவரையும் கொரோனா சோதனை செய்துக்கொள்ளுமாறு  நடிகை ரகுல் ப்ரீத் சிங் கேட்டுக்கொண்டார்.

ALSO READ | உருமாறும் கொரோனா குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை: ஹர்ஷ்வர்தன்

முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.,
"எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்".

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 

ared by Rakul Singh (@rakulpreet)

 

ALSO READ | ஜனவரி மாதம் முதல் COVID தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்: ஹர்ஷ் வர்தன்

இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News