இன்று பலர் பிஸியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக நகரங்களில் வசிக்கும் மக்கள் காலை எழுந்ததில் இருந்து இரவு வீட்டிற்கு திரும்பும் வரை அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். வேலையில் நிறைய அழுத்தங்களை உணர்கிறார்கள். இது முதுகுவலி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளுடன் நிறைய உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த அதிக மன அழுத்தத்தை போக்க சிலர் மருந்து எடுத்துக்கொள்கிறார்கள், உடல் வலிக்கு ஸ்ப்ரேகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதனை பயன்படுத்தாமல் மன அழுத்தத்தை எப்படி சிறப்பாக கையாள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு... சர்க்கரை நோய்க்கு எமனாகும் சில மூலிகை வைத்தியங்கள்
மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள்
மன நல மருத்துவர்கள் கூறுகையில், மன அழுத்தத்தில் இருக்கும் போது உடலுக்கு அசைவு கொடுப்பது உங்களை நன்றாக உணர வைக்கும் என்று தெரிவிக்கின்றனர். உதாரணமாக, நாம் சில மிருகத்தை கண்டால் பயப்படுகிறோம், அப்போது நமக்கே தெரியாமல் நம் உடல் நடுங்கலாம். ஏனெனில் நம் உடலில் டென்ஷன் மற்றும் ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் கைகள் மற்றும் கால்களுக்கு வேலை கொடுப்பது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். நம் உடலுக்கு வேலை கொடுப்பது உண்மையில் நம்மை நன்றாக உணர வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மக்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க பல்வேறு முறைகளை பின்பற்றுகின்றனர். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும்போதோ, உடலுக்கு அசைவு கொடுக்காமல் இருக்கும் போதோ, கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் நீண்ட நேரம் வேலை செய்யும் போது நமது கழுத்து மற்றும் முதுகுத் தசைகள் இறுகி வலிக்கும். இது நாள் முடிவில் நம்மை கடினமாக உணர வைக்கிறது. எனவே, சிறிது ஓய்வு எடுத்து, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு நம் உடலின் பாகங்களுக்கு வேலை கொடுத்தால், அது நம் தசைகளை தளர்த்தி, நம்மை நன்றாக உணர வைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நம் உடலுக்கு வேலை கொடுப்பது மன அழுத்தத்தைக் குறைத்து, நமது நரம்பு மண்டலத்தை சிறப்பாகச் செயல்பட உதவும். நாம் மன அழுத்தத்தை உணரும்போது, நம் உடல்கள் பதட்டமாகவும் கவலையுடனும் இருக்கும், ஆபத்தில் இருந்து ஓடுவதற்கு நாம் தயாராக இருப்பதைப் போல உணர்வு இருக்கும். எனவே அந்த சமயத்தில் உடலுக்கு வேலை கொடுக்கும் போது அதில் இருந்து வெளிவர உதவுகிறது. இந்த இயக்கம் கூடுதல் ஆற்றலை பெறவும், நமது இரத்த ஓட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், நம் உடலில் உள்ள அழுத்த இரசாயனங்களை குறைக்கவும் உதவும். தினசரி இதனை செய்து வந்தால் அது நம்மை மிகவும் சமநிலையாக உணரவும், நம் உணர்வுகளை சிறப்பாக நிர்வகிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
உடலுக்கு வேலை கொடுப்பது உங்களை மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் உணர வைக்கிறது. உங்கள் உடலின் பல்வேறு பாகங்களை அசைக்கும்போது உங்கள் தசைகளை தளர்த்தவும், கூடுதல் ஆற்றலைப் பயன்படுத்தவும், உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. உட்கார்ந்த இடத்தில் இருந்தோ அல்லது நின்று கொண்டோ இதனை செய்யலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் பீல் இருந்தால் இதனை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் சியா விதைகள்... சாப்பிடும் சரியான முறை இது தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ