EPFO Latest Update: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, அடுத்தடுத்து தனது உறுப்பினர்களுக்கு பல இன்ப அதிர்ச்சிகளை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்க EPFO வேகமாக செயல்பட்டு வருகிறது. விரைவில் இபிஎஃப் உறுப்பினர்கள் ஏடிஎம் -மில் இருந்து தங்கள் க்ளெய்ம் பணத்தை எடுக்க முடியும் என்று சமீபத்தில் செய்தி வந்தது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இ-வாலட் மூலம் க்ளெய்ம் செட்டில்மெண்ட்
இப்போது மற்றொரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. EPFO மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) உறுப்பினர்கள் இன்னும் சில நாட்களில் தங்கள் க்ளெய்ம்களை இ-வாலட் (E Wallet) மூலம் செட்டில் செய்ய வழிவகை செய்யப்படும் என்று செய்திகள் வந்துள்ளன. இந்த திட்டம் குறித்து விவாதிக்க இந்திய ரிசர்வ் வங்கியை (Reserve Bank of India) அரசு அணுகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தௌரா தெரிவித்தார். ஓய்வூதிய நிதிகளுக்கான அணுகலை எளிதாக்குவதே இதன் நோக்கம் என அவர் மேலும் கூறினார்.
RBI: ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது
இது குறித்து மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் பேசி வருவதாக தொழிலாளர் அமைச்சக செயலாளர் சுமிதா தௌரா தெரிவித்தார். இபிஎஃப் சந்தாதாரர்க்ள் (EPF Subscribers) தங்கள் ஓய்வூதிய நிதியை எளிதாக எடுக்க உதவுவதே இதன் நோக்கமாகும்.
ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் தொகை எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, ‘தங்கள் பணத்தை எளிதாக எடுக்க முடிவதே சந்தாதாரர்களுக்கு மிவும் முக்கியமானது. ஆட்டோ மோடில் செட்டில் செய்யப்பட்ட க்ளெய்ம்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்’ என்று தாவ்ரா கூறினார். இந்த பணத்தை மக்கள் ஏடிஎம் -மில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.
EPF Claim: வங்கிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கிய EPFO
இபிஎஃப் க்ளெய்ம் தொகையை நேரடியாக வாலட்டுக்கு எவ்வாறு மாற்றுவது என்பதைப் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் கூறினார். ‘இதற்காக வங்கிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். நடைமுறையில் இதை எப்படிச் செய்யலாம் என்று ஒரு திட்டத்தை உருவாக்குவோம்.’ என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, EPFO உறுப்பினர்களுக்கு ATM -இல் இருந்து PF தொகையை எடுக்கும் வசதியை வழங்குவதற்கு, டெபிட் கார்டு போன்ற வசதியை தொழிலாளர் அமைச்சகம் உருவாக்கி வருவதாக பல ஊடக அறிக்கைகள் கூறியுள்ளன.
Claim Settlement: க்ளெய்ம் செடில்மெண்ட் செயல்முறையிலிருந்து தேவையற்ற செயல்முறைகள் அகற்றப்பட்டன
இந்திய ஊழியர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக தொழிலாளர் அமைச்சகம் அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதாக இந்த மாத தொடக்கத்தில், அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சில முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக க்ளெய்ம்கள் விரைவாக தீர்க்கப்படுகின்றன என்றும் பல தேவையற்ற செயல்முறைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ -வின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு வங்கிகளைப் போன்று சிறந்ததாக மாற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று சுமிதா தௌரா கூறியிருந்தார்.
க்ளெய்ம் செடில்மெண்ட் இன்னும் வேகமாக நடக்கும்
தகவல் தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்திய பிறகு, ஜனவரி 2025 முதல் க்ளைம் செட்டில்மென்ட் இன்னும் வேகமாக செய்யப்படும் என சுமிதா தௌரா கூறினார். க்ளெய்ம் செய்யும் பயனாளிகள் தங்களது க்ளெய்ம் தொகையை நேரடியாக ஏடிஎம்மில் இருந்து எடுக்கக்கூடிய வகையில் செயல்முறையை எளிதாக்குவோம் என்று அவர் தெரிவித்தார். இதில் மனித தலையீடு மிகவும் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அதை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை அவர் வழங்கவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ