'விக்ரம்' படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் படம்!

பிளாக்பஸ்டர் படமான 'விக்ரம்' படத்தை தொடர்ந்து மற்றொரு படத்தில் நடிக்கப்போவதை நடிகர் கமல்ஹாசன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2022, 11:21 AM IST
  • விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
  • அனைத்து இடங்களிலும் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.
  • கமல் தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'விக்ரம்' படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் படம்!  title=

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இடைப்பட்ட காலத்தில் இவரது படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் அமோக வரவேற்பை பெற்றது.  வெகு நாட்கள் கழித்து கமலை திரையில் பார்த்த கொண்டாட்டம் ஒரு புறம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்தது ஒருபுறம் என இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்று இருக்கிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கமலுக்கு இணையாக விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | விக்ரம்: பாடல் வரிகள் திடீர் நீக்கம்- அரசியல் நெருக்கடி காரணமா?

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற விக்ரம் படத்தின் புரொமோஷன் நிகழ்வின் போது தனது அடுத்த படம் குறித்த தகவலை கமல்ஹாசன் உறுதி செய்திருக்கிறார்.  மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கக்போகும் படத்தில் கமல் நடிக்கவுள்ளார்.  இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்திருந்த விஸ்வரூபம் படத்தில் எடிட்டராக பணிபுரிந்தார், மற்றும் பஹத் பாசில் நடித்த படத்தை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற செய்தவர் மகேஷ் நாராயணன்.

மேலும் வெளியாகியுள்ள சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, கமல்ஹாசன் ஒரு புதிய படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும், அந்த கதை சிவாஜி கணேசன் மற்றும் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்ட 'தேவர்மகன்' படமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  அதனைத்தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தின் பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஷாருக்கானுக்கு ‘நோ’ சொன்ன சமந்தா! - காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News