சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து செய்யவதாக அறிவிப்பு!

சமீபகாலமாக நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான செய்திகள் உலா வந்த நிலையில் முதன்முறையாக நாக சைதன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பிரிவது தொடர்பாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்

Written by - ZEE Bureau | Last Updated : Oct 3, 2021, 02:50 PM IST
 சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து செய்யவதாக அறிவிப்பு!

நாக சைதன்யா - சமந்தா இருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  கடந்த சில வாரங்களாகவே நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருந்தாலும் இருவரும் அது தொடர்பாக முழுமையான விளக்கம் எதுவும் தரவில்லை.

இதனிடையே நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரது பெயரின் பின்னால் நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி வைத்திருந்தார் ஆனால் சமீபத்தில் அதனை மாற்றினார்.  இதனால் சமந்தாவை விரைவில் நாக சைதன்யாவை விவகாரத்து செய்யப்போகிறார் என்று பலரும் உறுதியாக கூறி வந்தனர்.

sam

மேலும் சமீபத்தில் நாகார்ஜுனா குடும்பத்தினர் பங்கேற்ற எந்த நிகழ்விலும் சமந்தா கலந்து கொள்ளவில்லை.  இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி கோவிலுக்கு சென்று இருந்த நடிகை சமந்தாவிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார் அதற்கு நடிகை சமந்தா காட்டமாக பதில் அளித்தார்.  அதேபோல் சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவுடன் எனக்கு  விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது என்று தெரிவித்திருந்த விஷயம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்திருந்தது  

அதேபோல் நடிகை சமந்தாவும் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  நாளுக்கு நாள் தனது விவாகரத்து குறித்த வதந்திகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இதனை தடுப்பதற்காக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.  இந்நிலையில் தற்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒருவழியாக தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதை அறிவித்துள்ளனர்.  இதிலும் கூட அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்களது ரசிகர்களும் அபிமானிகளும் ஊடகத்துற யினரும் தங்களுக்கு பக்கபலமாக இருக்கும்படியும் கூறியுள்ளனர்.

 

தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்களில் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அதிகமான தமிழ் படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார்.

ALSO READ ஓடிடியில் வெளியாகிறதா காத்து வாக்குல ரெண்டு காதல்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News