ஓடிடியில் வெளியாகிறதா காத்து வாக்குல ரெண்டு காதல்?

விஜய்சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2021, 05:41 PM IST
ஓடிடியில் வெளியாகிறதா காத்து வாக்குல ரெண்டு காதல்? title=

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிறைய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக தொடங்கின.  அந்தவகையில் விஜய்சேதுபதி நடிக்கும் படங்களும் ஓடிடியில் வெளியானது.  கடந்த வருடம் கா.பெ.ரானசிங்கம்  படம் இணையத்தில் வெளிவந்து மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

vjs

கடந்த மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், அனபெல்லே சேதுபதி என 3 படங்கள் ஒரே சமயத்தில் வெளி வந்தது.  அதில் 2 படங்கள் ஓடிடியிலும், ஒரு படம் திரையரங்கிலும் வெளியானது.  இந்த 3 படங்களுமே மக்களிடையே சரியாக சென்றடையாததால் இணையத்தில் ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர்.  

இன்னிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.  சரியான வெளியீட்டு தேதி அமையாததால் படக்குழு இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தீபாவளி தினத்தில் திரையரங்கில் ரஜினியின் அண்ணாத்தே, சிம்புவின் மாநாடு வெளியாக உள்ளது.  தற்போது விஷால், ஆர்யா நடிப்பில் உருவான எனிமி திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  ஓடிடியில், சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் படம் நவம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.  இந்த தீபாவளி ரேஸில் மேலும் சில படங்களும் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளன.

 

ALSO READ விஜய் படத்தின் வில்லன் நானியா? உண்மை பின்னணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News