6 நிமிடங்கள் ஐஸ் பாத் எடுத்த சமந்தா.. அதுவும் 4 டிகிரி குளிரில்

நடிகை சமந்தா தற்போது வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கிறார்ம் மேலும் இவர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 27, 2023, 02:09 PM IST
  • சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
  • ஐஸ் பாத் எடுப்பதால் தன் உடல்நலத்திற்கு நன்மை ஏற்படுவதாக கூறினார் சமந்தா.
  • 2024ம் ஆண்டில் சிடாடல் வெப்தொடர் வெளியாக உள்ளது.
6 நிமிடங்கள் ஐஸ் பாத் எடுத்த சமந்தா.. அதுவும் 4 டிகிரி குளிரில் title=

தென்திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், சமந்தா. தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் தடம் பதித்துக்கொண்டிருக்கும் இவர், உடல் மற்றும் மனது சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் ஸ்ட்ரிக்டாக இருப்பார். இதனால், அவரது உடல் மிகவும் திடமாக இருக்கும். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா 4 டிகிரி குளிர் தண்ணீரில் 6 நிமிடங்கள் ஐஸ் பாத் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் பாலிக்கு தன் தோழியும், மேக்கப் கலைஞருமான அனுஷ் சாமியுடன் சென்றிருக்கிறார். அங்கிருந்து தொடர்ந்து நடிகர் சமந்தா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அப்போது அங்கு அவர் ஐஸ் பாத் எடுத்துள்ளார். ஐஸ் பாத் எடுப்பதால் தன் உடல்நலத்திற்கு நன்மை ஏற்படுவதாக கூறினார் சமந்தா. அதனால் தான் இப்படி நடுங்கும் குளிரிலும் நீரில் இறங்கியிருக்கிறார். இந்தோனேசியாவுக்கு கிளம்பும் முன்பு வேலூரில் இருக்கும் பொற்கோவிலுக்கு சென்று தன் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்தார். அதன் பிறகு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டினார். அதுமட்டுமின்றி கோவையில் உள்ள ஈஷா தியான மையத்தில் தியானம் செய்த புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

மேலும் படிக்க | இரட்டை அர்த்த வரிகளுடன் ஜெயிலர் பட பாடல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் சமந்தா தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்திருந்தார். ஆரம்பத்திலிருந்தே இவருக்கு ஏற்றம் கொடுத்த சினிமா வாழ்க்கை அவ்வப்போது சறுக்கினாலும் தனது பெயரை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நிலை நிறுத்தி வைத்துள்ளார். சமீபத்தில் பாலிவுட் பக்கம் சென்ற இவர், சிட்டல் எனும் தொடரில் நடித்திருந்தார். மேலும் 2024ம் ஆண்டில் தான் சிடாடல் வெப்தொடர் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, இவருக்கு பாலிவுட் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதனால் அவர் திரும்பி வந்த பிறகு பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாகுந்தலம். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான சாகுந்தலம் படம் தோல்வி அடைந்தது. தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடன் "குஷி" படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் அவரது படப்பிடிப்பு முடிந்ததாக தெரிவித்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார். ஷிவ நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சமந்தா, சாகுந்தலம் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த போதே, தான் சினிமாவில் இருந்து சில நாட்கள் ப்ரேக் எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால் தனக்கு ப்ரேக் தேவைப்படுவதாகவும் உடல் நிலையில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | விலை உயர்ந்த வைர மோதிரத்திற்கு சொந்தக்காரியான தமன்னா..? யார் கொடுத்த பரிசு இது..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News