சினிமாவை விட்டு விலகும் சமந்தா..? ‘அந்த’ பாதிப்புதான் காரணமா..?

Samantha: தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 6, 2023, 09:08 AM IST
  • தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், சமந்தா.
  • சமீபத்தில் மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டார்.
  • சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவை விட்டு விலகும் சமந்தா..? ‘அந்த’ பாதிப்புதான் காரணமா..? title=

மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமாகி, இன்று உச்சம் தொடும் நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார். சமந்தா, இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், இவர் சினிமாவை விட்டு சில நாட்கள் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விவாகரத்து-உடல் நலக்குறைவு:

தமிழ், தெலுங்கு படங்களில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக விளங்குகிறார் சமந்தா. 2017ஆம் ஆண்டு பிரபல நடிகர் நாக சைதன்யாவை கரம் பிடித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து சில நாட்கள் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். உடற்பயிற்சி செய்வது, யோகா பயிற்சிகள் மேற்கொள்வது என்றிருந்த இவருக்கு, திடீரென ‘மயோசிடிஸ்’ என்ற தசை பிடிப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மேலும் படிக்க | 'போர் தொழில்' திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

தொடர் தோல்வி:

நோய் பாதிப்பு ஏற்படும் முன்னர், சமந்தா யசோதா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு விமர்சனங்களை பெற்று ‘சுமார் ரகம்’ என்ற விமர்சனத்தை பெற்றது. அதன் பிறகு புராணக்கதையை தழுவி எடுக்கப்பட்ட ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளை தூண்டிய இப்படம் ரசிகர்களின் கேளிக்குள்ளாகி தோல்வியில் முடிந்தது. 

பாலிவுட்டில் சமந்தா:

The Family Man என்ற தொடர் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்த சமந்தா, தற்போது Citadel எனும் தொடரில் வருண் தவானுடன் இணைந்துள்ளார் இந்த தொடர், ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதையடுத்து, அவர் விஜய் தேவர கொண்டாவுடன் ‘குஷி’ என்ற காதல் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இவர் நடித்து முடித்த பிறகு, சினிமாவில் இருந்து சில மாதங்கள் ப்ரேக் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவிலிருந்து விலகல்!

சமந்தா, சாகுந்தலம் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த போதே, தான் சினிமாவில் இருந்து சில நாட்கள் ப்ரேக் எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால் தனக்கு ப்ரேக் தேவைப்படுவதாகவும் உடல் நிலையில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளார்!

சமந்தா, தனது சினிமா ப்ரேக்கின் போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தனது ஃப்ரீ டைமை நன்றாக செலவழிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்யாண லுக்கில் சமந்தா:

சமந்தா தற்போது நடித்து வரும் குஷி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. காஷ்மீர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைப்பெற்றன. சமந்தா, சமீபத்தில் கல்யாண லுக்கில் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். அந்த போட்டோ இணையத்தில் வைரலானது. சமந்தா இந்த புகைப்படத்தில் மிகவும் அழகாக இருப்பதாக கூறி ரசிகர்கள் வழக்கம் போல அதற்கு ஹார்டின் விட்டு வந்தனர்.  

ஹாலிவுட்டில் சமந்தா..!

தமிழ், தெலுங்கு மொழி படங்களிலிருந்து பாலிவுட்டிற்கு தாவியுள்ள சமந்தாவிற்கு ‘அடிச்சது ஜாக்பாட்’ என்பது போல இன்னமொறு பெரயி வாய்ப்பும் கிட்டியுள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குநரின் ‘சென்னை ஸ்டோரீஸ்’ என்ற படத்தில் சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர், இருபாலின ஈர்ப்பாளராகவும், தைரியமான பெண்ணின் கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன. சமந்தா, தனது ப்ரேக்கிற்கு பிறகு இந்த படத்தின் பணிகளில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சிம்பு பட நாயகிக்கு ஆண் குழந்தை பிறந்தது..! இன்ஸ்டாவில் செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News