பயமுறுத்தும் காமெடி பேய்..!! தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீசர் வெளியீடு..!!

நல்ல வரவேற்பைப் பெற்ற "தில்லுக்கு துட்டு" இரண்டாம் பாகம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2018, 07:58 AM IST
பயமுறுத்தும் காமெடி பேய்..!! தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீசர் வெளியீடு..!! title=

கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் "தில்லுக்கு துட்டு" படம் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து "தில்லுக்கு துட்டு" படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்குகிறார். 

இதில் சந்தானம், ஷிர்தா சிவதாஸ், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சந்தானமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்' மூலம் தயாரிக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்னகவே "தில்லுக்கு துட்டு 2" படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

டீசர்:-

 

Trending News