சீதா ராமன் அப்டேட்: மீராவை டார்ச்சர் செய்யும் விஷால், ராம் எடுத்த முடிவு

Seetha Raman Today's Episode Update: மீராவை டார்ச்சர் செய்யும் விஷால், ராம் எடுத்த முடிவு - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2023, 12:18 PM IST
  • உன் அண்ணன் சேது நல்லவரே இல்லை: ராம்
  • மீராவுக்கு போன் செய்யும் விஷால்.
  • கண்கலங்கும் சீதா.
சீதா ராமன் அப்டேட்: மீராவை டார்ச்சர் செய்யும் விஷால், ராம் எடுத்த முடிவு title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகா விஷாலை மாப்பிள்ளையாக கொண்டு வந்த நிலையில் மீரா சோகமாக ரூமுக்குள் செல்ல இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

உன் அண்ணன் சேது நல்லவரே இல்லை: ராம்

ராம் மற்றும் துரை என இருவரும் மீராவை சந்தித்து உன் அண்ணன் சேது நல்லவரே இல்லை, உன்னுடைய வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறாரு அப்படி இருக்கும்போது அவருடைய ஆசீர்வாதத்துக்காக நீங்க எதுக்கு காத்திருக்கணும் என்று கேட்க மீரா அவர் என்ன பத்தி எப்படி நினைத்தாலும் நான் அவரை என்னுடைய அப்பாவாக பார்க்கிறேன் என்று சொல்கிறாள். 

பிறகு ராம், சீதா, துரை சேர்ந்து பேசி ஒரு வழியாக ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு மீராவை சம்மதிக்க வைக்கின்றனர். அடுத்ததாக மீரா இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதம் சொல்லிட்டேன் ஆனால் சத்தியன் என்ன சொல்வார் என்று தெரியவில்லையே என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | ஜெயிலரில் ஆர்சிபி ஜெர்ஸி... கேஸ் போட்ட நிர்வாகம் - அடிபணிந்த சன் பிக்சர்ஸ்!

மீராவுக்கு போன் செய்யும் விஷால்

இதைத் தொடர்ந்து கஞ்சா போதையில் இருக்கும் விஷால் தொடர்ந்து மீராவுக்கு போன் செய்ய மீரா போனை எடுத்து பேச அது விஷால் என்று தெரிந்ததும் போனை வைத்து விடுகிறாள். இதனால் கடுப்பாகும் விஷால் நேராக மீராவை பார்க்க வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.

கண்கலங்கும் சீதா

இங்கே மீராவின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை சொல்லி சீதா கண்கலங்க ராம் சமாதானம் செய்கிறான்.

தூக்கம் வராமல் தவிக்கும் சீதாவுக்காக ஒரு பாட்டு பாடி தூங்க வைக்கிறான். நடு இரவில் வீட்டுக்கு வரும் விஷால் மீராவின் ரூமை தேடி பிடித்து அவளுக்கு அதிர்ச்சி கொடுக்கிறான். 

ஒரே ஒருமுறை ஐ லவ் யூ சொல்லு என்று மீராவை விஷால் பாடாய் படுத்த ராம், சீதா ஆகியோர் அவனை வெளியே அனுப்ப முயற்சி செய்கின்றனர். விஷால் நான் மீராவை கட்டிக்க போறவன், என்கூட அனுப்புங்க என்று சொல்லி இழுத்துச் செல்ல மகாவும் தடுத்து நிறுத்த முயற்சி செய்ய முடியாமல் போகிறது. பிறகு கோபத்தை அடக்க முடியாத ராம் விஷாலை அடித்து துவம்சம் செய்கிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | தனி ஒருவன் 2 அப்டேட்.. மிகப்பெரிய ட்விஸ்ட்டுடன் வீடியோ வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News