சீதா ராமன் அப்டேட்: சீதாவால் சிக்க இருந்த குற்றவாளி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த மகாலட்சுமி

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 21, 2023, 12:26 PM IST
  • தயாராகும் ரவுடிகள் லிஸ்ட்.
  • அடையாளம் காட்ட தயாராகும் சீதா.
  • கவனத்தை திசை திருப்பும் மகாலட்சுமி.
சீதா ராமன் அப்டேட்: சீதாவால் சிக்க இருந்த குற்றவாளி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த மகாலட்சுமி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த சீதாவின் அப்பா ராஜசேகர் தூக்கமின்றி குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என உறுதியாக இருக்க அர்ச்சனாவுக்கு பயம் உண்டானது. இதனை தொடர்ந்து இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தயாராகும் ரவுடிகள் லிஸ்ட்

அதாவது விடிந்ததும் ராஜசேகர் இன்ஸ்பெக்டரை அழைத்து அந்த பகுதியில் ஆட்கள் கடத்தல், கொள்ளை போன்ற கேஸ்களில் பதிவாகியுள்ள ரவுடிகளின் லிஸ்டை எடுத்து வர சொல்ல அவரும் அதை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கிறார். 

அடையாளம் காட்ட தயாராகும் சீதா

ராஜசேகர் சீதாவை கூப்பிட்டு உன்னை கடத்தினவன் யார் என்பது உனக்கு தெரியுமா? உன்னால அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்க சீதா கண்டிப்பாக முடியும் என்று சொல்கிறாள். பிறகு இவர் ஒவ்வொரு ரவுடிகளின் போட்டோவையும் காட்ட அதற்குள் மகா ஏற்பாடு செய்த ரவுடியின் போட்டோவும் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறாள். 

மேலும் படிக்க | அஜித் மனைவி ஷாலினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

கவனத்தை திசை திருப்பும் மகாலட்சுமி

இதில் இருந்து தப்பிக்க முடிவெடுத்து எல்லாருக்கும் நானே காபி போட்டு கொண்டு வரேன் என அர்ச்சனாவை  கிச்சன் அழைத்து சென்று கொதிக்கும் பாலில் அவளது அர்ச்சனாவின் கையை எடுத்து போட்டு கத்த வைக்கிறாள். எல்லாரும் சத்தம் கேட்டு பதறி ஓடி வர அனைவரது கவனத்தையும் திசை திருப்பி மகா சம்மந்தப்பட்ட ரவுடியின் போட்டோவை மட்டும் எடுத்து விடுகிறாள்.  அடுத்து சுபாஷ்க்கு மட்டும் இவை அனைத்தையும் செய்தது மகா தான் என்ற விஷயம் தெரிய வருகிறது. 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News