பிராண்ட் அம்பாசிடர் அவதாரம் எடுக்கும் சிம்பு?... ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபல ஓடிடி தளத்தின் அம்பாசிடராக சிம்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Last Updated : Apr 7, 2022, 03:35 PM IST
  • பிராண்ட் அம்பாசிடர் சிம்பு
  • ஆஹா ஓடிடி தளம்
  • ஓடிடி தளத்தின் அம்பாசிடர் சிம்பு
பிராண்ட் அம்பாசிடர் அவதாரம் எடுக்கும் சிம்பு?... ரசிகர்கள் மகிழ்ச்சி title=

ஓடிடி தளங்களின் வருகையை அடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓடிடி தளங்கள் அதிகம் உருவாகியுள்ளன. அந்தவகையில் தெலுங்கு திரையுலகுக்கு என அல்லு அர்ஜுன் குடும்பத்தின் சார்பில், “ஆஹா” என்ற ஓடிடி தளம் உருவாகியுள்ளது.

தமிழிலும் தடம் பதித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தில், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மேலும் பல்வேறு தமிழ் திரைப்படங்களை வாங்கி வெளியிடவும், வெப் சீரிஸ்கள் தயாரிப்பதிலும் அந்த நிறுவனம் மும்முரமாக களமிறங்கியுள்ளது. 

Simbu

இந்நிலையில் ஆஹா ஓடிடி தளத்தை தமிழில் மேலும் பிரபலமடைய செய்யும் நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதன்படி, ஆஹா ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக சிம்பு இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | தனுஷ் என்னை காதலித்தார் - நடிகையின் ஓபன் டாக்

சிறு வயதிலிருந்தே நடித்துவரும் சிம்பு கடந்த சில வருடங்களாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதுமட்டுமின்றி உடல் எடையும் அதிகம் இருந்ததால் சிம்புவின் கரியர் முடிந்துவிட்டதாகவே பலர் கூறினர்.

Simbu

ஆனால் தீவிர ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் சிம்பு. அவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல ராவணன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | தளபதி 66 - பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு

கரியர் முடிந்துவிட்டது என பெரும்பாலானோரால் கூறப்பட்ட சிம்பு தற்போது சினிமா மட்டுமின்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகிறார். அதுமட்டுமின்றி தற்போது ஆஹா ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக சிம்பு நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News