இவருடன் தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Last Updated : Dec 14, 2017, 09:19 AM IST
இவருடன் தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!! title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். 

இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த படத்தை 24ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அடுத்த ஆண்டின் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று 
எதிர்பார்க்கப்டுகிறது. 

Trending News