சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய SPB- வீடியோ வைரல்

அவரது குரல் மற்றும் பாடலைத் தவிர, புகழ்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை சந்தித்த எவரும், அவருடைய பணிவு மற்றும் அன்பான இயல்பு பற்றி பேசாமல் இருந்தது இல்லை.

Last Updated : Sep 27, 2020, 10:57 AM IST
    1. சபரிமலைக்கு அவர் சென்றபோது எடுக்கபட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
    2. எஸ்பிபி கடந்த செப்டெம்பர் 25 ஆம் தேதி காலமானார்,
    3. இது பிரபலங்கள் மத்தியிலும், இசை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது.
சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய SPB- வீடியோ வைரல் title=

அவரது குரல் மற்றும் பாடலைத் தவிர, புகழ்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை (SP Balasubrahmanyamசந்தித்த எவரும், அவருடைய பணிவு மற்றும் அன்பான இயல்பு பற்றி பேசாமல் இருந்தது இல்லை. மூத்த பாடகரின் சக மனிதர்களிடம் உண்மையான அன்பும் பாசமும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்போது ரசிகர்களால் சாட்சியாக உள்ளது, அவர் விருந்தினராக பங்கேற்றுள்ளார். மிகவும் விரும்ப்படும் எஸ்பிபி SPB கடந்த செப்டெம்பர் 25 ஆம் தேதி காலமானார், 

இதற்கிடையில் சென்ற வரிடம் சபரிமலைக்கு (Sabarimala) அவர் சென்றபோது எடுக்கபட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி. பன்முகத்தன்மை கொண்டவர். சபரிமலை கோவிலுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர் சபரிமலைக்கு செல்லும் போதெல்லாம் டோலியில் பயணிப்பது வழக்கம். அவ்வாறு அவர் டோலியில் பயணிக்கும் முன்பாக டோலி தூக்குவோரின் கால்களை தொட்டு வணங்கிய பின்னரே டோலியில் அமர்வதை வழக்கமாக வைத்துள்ளார். முன்பு அவர் இதுபோன்று சென்றபோது அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

ALSO READ | SPB-யின் இறுதி பயணம்: குரல் அசுரனின் உடல் அஸ்தமமானது.. 72 குண்டுகள் முழங்க அடக்கம்

 

 

முன்னதாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubrahmanyam) கொரோனான் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட்-5ம் தேதி முதல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை கடந்த செப்டெம்பர் 24 ஆம் தேதி மோசமடைந்தது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த செப்டெம்பர் 25 ஆம் தேதி மதியம் அவரது உயிர் பிரிந்தது.

இது பிரபலங்கள் மத்தியிலும், இசை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. அதனால் இந்தியா முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் அனைவருமே அவருக்கு சமூக வலைதளங்களில் பிரியா விடை அளித்தனர். 

 

ALSO READ | எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல ஆண்டுகளாக எனது குரலாக இருந்து வருகிறார்: ரஜினிகாந்த்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News