SPB-யின் இறுதி பயணம்: குரல் அசுரனின் உடல் அஸ்தமமானது.. 72 குண்டுகள் முழங்க அடக்கம்

அவரது உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் (Gun Salute) முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் SPB-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 26, 2020, 01:37 PM IST
  • 72 துப்பாக்கி குண்டுகள் (Gun Salute) முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
  • எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam) நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.
  • தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் SPB-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  • அவரது பாடல்கள் இருக்கும்வரை, நீங்க எல்லாரும் இருக்கும் வரை அப்பா இருப்பார்: மகன் சரண்
SPB-யின் இறுதி பயணம்: குரல் அசுரனின் உடல் அஸ்தமமானது.. 72 குண்டுகள் முழங்க அடக்கம் title=

சென்னை: பாடகரும் நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam) நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார். 74 வயதான அவர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவரது உடல் தாமரைபாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

நேற்று எஸ்பிபியின் மகன் சரணும் (SP Charan) செய்தியாளர்களிடையே இதனை உறுதிப்படுத்தியுதுடன், “எஸ்பிபியின் பாடல்கள் இருக்கும்வரை, நீங்க எல்லாரும் இருக்கும் வரை அப்பா இருப்பார்” என்று கண்ணீருடன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

புகழ்பெற்ற பாடகரின் மறைவு அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பல பிரபலங்கள் அவருக்கு சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

ALSO READ |  SP Balasubrahmanyam: 16 மொழிகள்.. 40 ஆயிரம் பாடல்கள்.. ஏராளமான விருதுகள்..

அவரது மறைவை அடுத்து, பிரபல பாடகர்கள் என ரசிகர்கள் முதல் பொது மக்கள் வரை, சனிக்கிழமை தாமரைபாக்கத்தில் துக்கம் அனுஷ்டிக்கின்றனர். 

தாமரைபாக்கத்தில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வந்ததால், சுமார் 500 போலீஸ் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். 

ALSO READ |  Miss You SPB: மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ!!

நேற்று தமிழக முதல்வர் (TN CM K Palaniswami) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உட அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கூறியிருந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் (Gun Salute) முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் SPB-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் 1969 ஆண்டு வெளிவந்த எம்ஜிஆர் படமான ‘அடிமைப்பெண்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்.

ALSO READ |  SPB: இசையின் சிகரம் சரிந்தது... சிகரம் கடந்து வந்த பாதை...!!!

ஆனால், அதே ஆண்டு வெளியான ஜெமினி கணேசன் நடித்த, ‘சாந்திநிலையம்‘ என்ற படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல்தான் முதலில் ரெகார்ட் செய்யப்பட்டது. முதலில் வெளியானது தான் "ஆயிரம் நிலவே வா" என்ற பாடல்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News