close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

தர்பார் படத்தில் இணையும் மற்றொரு பிரபல பாலிவுட் நடிகர்

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Updated: May 24, 2019, 04:51 PM IST
தர்பார் படத்தில் இணையும் மற்றொரு பிரபல பாலிவுட் நடிகர்

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அக்‌ஷய்குமாரும் வில்லனாக நடித்திருந்தனர். அந்த வகையில் தர்பார் படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோர் வில்லத்தனமான வேடங்களில் வருவதாக கூறப்பட்டது. இப்போது பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.